Mayiladuthurai

News July 16, 2024

மயிலாடுதுறையில் வேலை வாய்ப்பு முகாம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், யூனியன் கிளப் ஆகியவை இணைந்து நடத்தக்கூடிய மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி யூனியன் கிளப்பில் நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு துவங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ள வேலை வாய்ப்பு முகாமில் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

மயிலாடுதுறையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு

image

அஞ்சல் துறையில் 44,228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 15, 2024

காமராஜர் போல் தோன்றி ஆச்சர்யப்படுத்திய ஆசிரியர்

image

கர்மவீரர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. சீர்காழி பகுதியில் உள்ள பல்வேறு பள்ளிகளில் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், சீர்காழி சட்டநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் காமராஜர் போல் உடை உடுத்தி வேடம் தரித்து மாணவர்கள் முன் தோன்றி மெய்சிலிர்க்க வைத்தார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினர்.

News July 15, 2024

போக்சோவில் காவலர் கைது

image

மயிலாடுதுறை, பெரம்பூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த காவலர் திருநாவுக்கரசு காவலர் குடியிருப்பில் 16வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கியராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெரம்பூர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காவலர் திருநாவுக்கரசை கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.

News July 14, 2024

மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மகளிர் திட்ட கூட்டமைப்புகளின் தணிக்கைக்கு தகுதியுடைய தணிக்கையாளர்கள், தணிக்கை நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் என்ற முகவரிக்கு ஜூலை 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 14, 2024

மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் விவசாயிகளிடம் இருந்து மறைமுக ஏலம் மூலம் பருத்தி கொள்முதல் நடைபெறுகிறது. வெளியூரை சேர்ந்த வியாபாரிகள் வந்து விவசாயிகளிடம் பருத்தி கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில், இன்று பருத்தி கொள்முதல் பணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டார்.

News July 13, 2024

எம்.பி.யை வரவேற்றபோது நேர்ந்த சம்பவம்

image

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.பி. சுதா கிராமங்கள்தோறும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்தவகையில், சீர்காழி அடுத்த கொள்ளிடம் பகுதிக்கு
நேற்று (ஜூலை 12) வந்தபோது, காங்கிரஸ் கட்சியினர் வெடித்த பட்டாசு பொறி பட்டு கூரை ஒன்று தீப்பற்றியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

News July 13, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிட்டு தெரிவித்துள்ளார். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News July 13, 2024

தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

மயிலாடுதுறையில் தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேர்வு மையத்திற்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு செய்தார். அப்போது சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

News July 12, 2024

முதல்வரின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல்,  நிறுவன அமைப்பை உருவாக்குதல், பொது விநியோக அமைப்புகளை திறமையான நெறிமுறையாக மாற்றுதல், பேரிடரில் சிறந்த செயல்திறன் போன்ற பன்முகத் திறமை புரிந்தவர்கள் இவ்விருதுக்கு நாளை (ஜீலை.13) க்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!