Mayiladuthurai

News July 18, 2024

மயிலாடுதுறையில் கண்டன ஆர்ப்பாட்டம்

image

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலையில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யவும், வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் க்ண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நாம் மக்கள் இயக்க தலைவர் வழக்கறிஞர் ஷங்கமித்திரன் உட்பட பல்வேறு அமைப்பு வழக்கறிஞர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News July 18, 2024

மயிலாடுதுறை கலெக்டர் நேரில் ஆய்வு

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மல்லியம் கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம நிர்வாக அலுவலரிடம் தரவுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த நிகழ்வின் போது சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கீதா, மயிலாடுதுறை தாசில்தார் விஜயராணி உள்ளிட்டோர் இருந்தனர்.

News July 18, 2024

டிராக்டர் வழங்கிய மயிலாடுதுறை கலெக்டர்

image

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆணை மேலகரம் ஊராட்சியில் இன்று 2 விவசாயிகளுக்கு தலா 9 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள டிராக்டரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி மகாபாரதி இன்று வழங்கினார். அப்போது வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணு பிரியா மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 18, 2024

TNPSC: நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்

image

TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

News July 18, 2024

புதிய கோட்டாட்சிருக்கு கலெக்டர் வாழ்த்து

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை, புதிதாக வருவாய் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட ரா.விஷ்ணுபிரியா அவர்கள் நேரில் சந்தித்து(ஜூலை 17) வாழ்த்து பெற்றார். தொடர்ந்து, பணி சிறக்க வேண்டி கோட்டாட்சிருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

News July 17, 2024

மயிலாடுதுறை: இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு இன்று (ஜூலை 17) இரவு 10 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், மதுரை, தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழை வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 17, 2024

மக்களுடன் முதல்வர் முகாம் – ஆட்சியர் தகவல்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் 43 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த துறையில் மின்சாரம், வருவாய் துறைகள் சார்ந்த சான்றுகள் வழங்கப்படுகிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மேற்குறிப்பிட்ட துறைகளுக்கான சேவைகளுக்கு தேவையான ஆவணங்களை சமர்பித்து முகாம்களில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 17, 2024

இலவச ஆன்மிக சுற்றுலாவுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி

image

அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களை இலவச ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஆடி மாதம் அழைத்துச் செல்லப்படும் இந்த சுற்றுலா செல்ல விரும்புவோர் விண்ணப்பிக்க நாளை (ஜூலை 18) கடைசி நாளாகும். இந்து மதத்தை பின்பற்றும் 60 முதல் 70 வயது கொண்ட முதியோர் இத்திட்டத்திற்கு HRCE இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 16, 2024

இனிப்புகள் வழங்கி கொண்டாடிய மாவட்ட செயலாளர்

image

பாட்டாளி மக்கள் கட்சியின் 36 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பாமக மாவட்ட செயலாளர் லண்டன் ரெ. அன்பழகன் தலைமையில் பாமக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் இளைஞர் அணி நிர்வாகி முருகவேல், சீர்காழி நகர செயலாளர் சக்கர கார்த்திக், பாமக நகர தலைவர் கார்த்திக் மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!