India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திரு சி.வீ.மெய்யநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன், ராஜ்குமார் மற்றும் பன்னீர்செல்வம் , நகர மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் காவிரி ஆற்றில் அமைந்துள்ள தண்ணீர் பிரிக்கும் ராஜேந்திரன் நீர் ஒழுங்கியை காவிரி நீர் இன்று (5/8/2024) காலை சரியாக 9 மணி அளவில் வந்தடைந்தது. அவ்வாறு வந்த காவிரி தாயை பொதுபணித்துறை அதிகாரி மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் மலர் தூவி வரவேற்றனர். ஆடிப்பெருக்கு முடிந்து இரண்டு நாட்களுக்கு பிறகு தண்ணீர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று மற்றும் நாளை இடை இடையே 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வரைவு காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை, சீர்காழி, திருவிழாந்தூர், கூரைநாடு ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.6) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. அதன்படி, சீர்காழனி, பணமங்கலம், மூங்கில் வளாகம், கொள்ளிடம், கூரைநாடு, மயிலாடுதுறை, காவிரி நகர், திருவிழாந்தூர், தாடாளன் விளந்திட சமுத்திரம், புளிச்சக்காடு உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. அதன்படி தமிழத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில், (ஆகஸ்ட்.5) காலை 10 மணி வரை கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா என்பதை கமெண்ட்டில் பதிவிடவும்.
நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று மிதமானது லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை நகரின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் துறை மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நவீன முறை சலவையகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆட்சியர் அலுவலகத்தில் 2 ஆம் தளத்தில் அமைந்துள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உரிய சான்றுகளை சமர்ப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை எஸ்.பி மீனா அறிவுறுத்தலின்படி வெள்ள பாதிப்பால் மக்களுக்கு எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் மீட்பு பணியில் பயிற்சி பெற்ற காவலர்களை ஒருங்கிணைத்து 10 குழுக்களாக பிரிந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளாக 13 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத அட்டை தாரர்கள், இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம். ஜூன் மாதம் து.பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,81,786 அட்டை தாரர்களில் ஜூலை மாதத்துக்கான பொருட்களை பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: மங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைக்காரன் சத்திரம், தைக்கால், சீயாளம், குமிலங்காடு, துளசேந்திபுரம், புங்கனூர், பெருமங்கலம், கற்கோவில், மருவத்தூர், மருதங்குடி, அரூர், திட்டை, செம்மங்குடி, திருக்கருகாவூர், விநாயககுடி, கீழாநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு நாளை (திங்கள்) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.SHARE NOW
Sorry, no posts matched your criteria.