India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறையில் (9.6 2024)ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2024 – 2025ஆம் ஆண்டுக்கான மாணவ மற்றும் மாணவியருக்கான சேர்க்கை நடைபெறுகிறது. தொடர்ந்து மூன்று வருட முழு நேர பயிற்சி அளிக்கப்பட்டு அரசின் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9751674700 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற 9ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 77 மையங்களில் 23190 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். 4 வட்டங்களுக்கும் தலா ஒரு துணை ஆட்சியர் நிலையில் தேர்வு பணியை நடத்திட கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் நாடு முழுவதும் மூன்று சட்ட திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. தொடர்ந்து இது பற்றிய பயிற்சி வகுப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் காவலர்களுக்கு அளிக்கப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்பார்வையில் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு திருத்தம் பற்றிய பயிற்சி இன்று அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கடந்த ஜூன் மூன்றாம் தேதி அன்று பிறந்த குழந்தைகள் அனைவருக்கும் தங்க மோதிரம் , வெள்ளி பாலாடை மற்றும் புத்தாடை உள்ளிட்டவை இன்று வழங்கப்பட்டது. கலைஞரின் 101 வது பிறந்த நாளினை முன்னிட்டு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் மற்றும் அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் இணைந்து வழங்கினர்.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் சுதா – 5,18,459 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் பாபு – 2,47,276 வாக்குகள்
*பாமக வேட்பாளர் ஸ்டாலின் – 1,66,271 வாக்குகள்
*நாதக வேட்பாளர் பி.காளியம்மாள் – 1,27,642 வாக்குகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மயிலாடுதுறை உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
மயிலாடுதுறை பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதனிடையே நோட்டாவிற்கு 8695 வாக்குகள் பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தமாக 1088164 வாக்குகள் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா 2,71,183 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 24 சுற்றுகளாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் இறுதி சுற்று முடிவில் காங்கிரஸ் கட்சி மொத்தம் 5,18,459 வாக்குகளும் அதிமுக 2,47,276 வாக்குகளும் பாமக 1,66,271 நாம் தமிழர் கட்சி 1,27,642 வாக்குகளும் பெற்றுள்ளன.
2024 மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்ட திமுக – காங். வேட்பாளர் சுதா 4,93,989 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பாபு 2,33,478 வாக்குகள் பெற்று 2ஆம் இடம் பிடித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.