India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா 15,000 மற்றும் சான்றிதழ், தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 32 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பெறுகின்றன. தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பப்படிவங்கள் என்ற தலைப்பில் உள்ள இணைப்பின் மூலமாகப் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் , மிக பிற்படுத்தப்பட்டோர் & சீர் மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 10 நபர்களைக் கொண்ட ஒரு குழுவிற்கு ஒரு ஆயத்த ஆடை உற்பத்தி அலகு அமைத்திட ஏதுவாக ரூ.3 லட்சம் வீதம் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி நேற்று(ஆக.,9) தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டினக் கோழிக்குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம்) 50 விழுக்காடு மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி உரிய சான்றுகளை சமர்ப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட 34 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி, நீலகிரி, பெரம்பலூர், சேலம், திருப்பத்தூர், நாகை, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி-யாக இருந்த மீனா மாற்றப்பட்டு, சென்னை மாநகரின் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக இருந்த ஜி. ஸ்டாலின், மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ராமேஸ்வரத்திலிருந்து ஆகஸ்ட் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில், இரவு புறப்பட்டு திருச்சி மயிலாடுதுறை வழியாக பனாரஸ் செல்லும் ரயில், மயிலாடுதுறை , தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்கு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் திருச்சியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு, விருத்தாச்சலம் கடலூர் வழியாக செல்லும் என நேற்று தென்னக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கூட்டுறவு துறையின் செயல்பாடுகள் தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமல்ராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.