India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் மூலம், கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வருகின்ற ஆகஸ்ட் 19 முதல் 24ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. எனவே ஆர்வமுள்ள கிராமப்புற இளைஞர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேற்று தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மயிலாடுதுறை மின்வாரிய கோட்ட அலுவலகத்தில் நாகை மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ரவி தலைமையில் வருகிற 14-ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணியளவில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.இது குறித்த அறிவிப்பினை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்-1077 மற்றும் 7092255255 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் கூட்ட அரங்கில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. மேலும், கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பொதுமக்கள் 293 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதனை தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் ஏழ்மை நிலையில் உள்ள 500 பெண்களுக்கு ரூ.6 கோடியே 45 லட்சம் செலவில் நாட்டின கோழிக்குஞ்சுகள் 50 சதவீத மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் பயனாளி ஏழைப் பெண்ணாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மயிலாடுதுறை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆனந்ததாண்டவபுரம், வடகரை ,கூறைநாடு ஆகிய மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் ஆகஸ்ட் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே நல்லத்துக்குடி, முளப்பாக்கம், செறுதியூர் ,வடகரை , கழனிவாசல் அன்னவாசல், கூரைநாடு , பூக்கடை தெரு, அண்ணா வீதி, காவிரி நகர் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 8 மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரை பகுதி என்பது வரலாற்று சின்னமான டேனிஷ் கோட்டை அமைந்துள்ள ஓசோன் காற்று வீசும் பகுதியாகும். நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இன்று வார விடுமுறை என்பதால், பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும். எனவே மாலையில் கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி கடலில் குளிக்க வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக தென் தமிழகத்திலிருந்து அனைத்து ரயில்களும் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள வேளையில் நாளை திருச்சியிலிருந்து தாம்பரம் வரை சிறப்பு இரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முன்பதிவு செய்ய தேவை இல்லை. திருச்சியில் இருந்து புறப்படும் இந்த ரயில் மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை செல்கிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு தலா 15,000 மற்றும் சான்றிதழ், தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து வரும் 30ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.