Mayiladuthurai

News June 14, 2024

மயிலாடுதுறையில் நாளை மின் நிறுத்தம்

image

மயிலாடுதுறை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட சில மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நாளை ஜூன் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து நலத்துக்குடி , முளப்பாக்கம் செருதியூர் , கூறைநாடு மற்றும் நீடூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட அருவாப்படி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், அலுவலர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகின்ற ஜூன் 19 காலை 9 மணி முதல் ஜூன் 20 காலை 9 மணி வரை தரங்கம்பாடி வட்டத்தில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய உள்ளனர். எனவே இன்று முதல் பொதுமக்கள் கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அலுவலர்களிடம் மனுவை வழங்கி பயன்பெறுமாறு ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

மயிலாடுதுறை எம்பிக்கு வாழ்த்து

image

மயிலாடுதுறையில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்கறிஞர் சுதா இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்பிக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கனகராஜ் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

News June 13, 2024

மயிலாடுதுறை ஆட்சியர் வேண்டுகோள்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர் மற்றும் சார் பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இதன் மீது பொதுமக்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் அதனை 15 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

மயிலாடுதுறை: இடையூறாக இருந்த மரங்கள் அகற்றம்

image

மயிலாடுதுறை அடுத்த நீடூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக அடிக்கடி வீட்டுக்கு உபகரணங்கள் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து இருந்தனர். இதனிடையே ஊராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள மூன்று இடங்களில் மின்பாதைகளுக்கு இடையூறாக இருந்த மரங்கள் மற்றும் அடர்ந்த காடுகள் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு முழுவதுமாக இன்று அகற்றப்பட்டது.

News June 13, 2024

மயிலாடுதுறை:ரயில் பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு திருச்சி வழியாக சேலம் சென்று மீண்டும் மயிலாடுதுறை வரும் ரயில் ஜூன் 13 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் சேலத்திலிருந்து புறப்படாது என ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு கரூரில் புறப்பட்டு திருச்சி வழியாக மயிலாடுதுறை வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News June 13, 2024

மயிலாடுதுறை: மமக தலைவருக்கு நன்றி தெரிவித்த எம்பி

image

I.N.D.I.A கூட்டணி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள வழக்கறிஞர் சுதா அவர்கள் நேற்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA அவர்களை சென்னை மமக தலைமையகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார். எம்பி R.சுதாவிற்கு வாழ்த்து தெரிவித்தார் பேராசிரியர் ஜவாஹிருல்லா. நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News June 12, 2024

மமக தலைவரிடம் வாழ்த்து பெற்ற மயிலாடுதுறை எம்பி

image

மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா இன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். தொடர்ந்து சால்வை அணிவித்து எம்பிக்கு மரியாதை செலுத்திய நிலையில் சிறப்பாக பணியாற்றும் படி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். அப்போது தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா உட்பட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News June 12, 2024

மயிலாடுதுறையில் குறைதீர்க்கும் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து மனுக்களாக பெற்றுக் கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

News June 12, 2024

திருமாவளவனிடம் வாழ்த்து பெற்ற எம்பி

image

மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் சுதா இன்று விசிக கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அதனைத் தொடர்ந்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய நிலையில் சிறிது நேரம் கலந்துரையாடினார். அப்போது விசிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!