Madurai

News January 5, 2025

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (05.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 5, 2025

எம்.பி சு.வெங்கடேசனுக்கு நெஞ்சு வலி

image

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் பங்கேற்றபோது நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News January 5, 2025

எங்களை விமர்சனம் செய்யுங்கள் – மதுரை ஐகோர்ட் நீதிபதி

image

மதுரை : நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மதுரை ஐகோர்ட் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன், “நீதிபதிகள் செய்யும் வேலை தெய்வப் பணி என கருதப்படுகிறது, அதுவும் பிற பணிகளை போன்று விமர்சனத்திற்கு உட்பட்ட பணி தான். நீதிபதிகளின் செயல்பாட்டை, தீர்ப்பை விமர்சிப்பது இந்தியாவில் மிகவும் குறைவு. இந்த போக்கு மாற வேண்டும். நீதிபதிகளின் பணிகளையும், தீர்ப்பு களையும் கூர்மையாக விமர்சிக்க வேண்டும்” என்று கூறினார்.

News January 5, 2025

மதுரையில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடல் தகுதி பரிசோதனை தொடக்கம்

image

மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகை 14-ம் தேதி அன்று அவனியாபுரத்தில் தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் 15-ம் தேதி பாலமேடு, 16-ம் தேதி அலங்காநல்லூரில் நடக்கிறது.
இந்த மூன்று ஜல்லக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு நேற்று முதல் உடல் தகுதி பரிசோதனை, அந்தந்த பகுதி கால்நடை மருத்துவமனைகளில் தொடங்கியது. காளைகளுக்கு உடல் தகுதிச்சான்று வழங்கி வருகிறார்கள்.

News January 5, 2025

மதுரை இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உள்ளூர் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 4, 2025

அமமுக புறநகர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்

image

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ” மதுரை புறநகர் மாவட்டம் அவனியாபுரம் 1 மற்றும் திருப்பரங்குன்றம் 1 ஆம் பகுதி கழக நிர்வாகிகள், திருப்பரங்குன்றம் 1ஆம் பகுதிக்குட்பட்ட வட்டக் கழக செயலாளர்கள், பாலமேடு பேரூர் கழக செயலாளர்கள்’ நியமனம் வெளியாகியுள்ளது.

News January 4, 2025

பட்டாசு விபத்தில் 6 பேர் பலி: “கூடுதல் நிவாரணம்”

image

சென்னை செல்வதற்காக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் இன்று(ஜன.4) மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம், “அருப்புக்கோட்டை பட்டாசு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண தொகையாக ரூ.3 லட்சம் அறிவித்திருக்கிறார். உரிமையாளரிடம் பேசி கூடுதல் தொகை பெற்று தரப்படும்” என்றார். விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இன்று 6 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2025

விருதுநகர் வெடி விபத்து குறித்து அமைச்சர்  பேட்டி

image

வெடி விபத்துக்கள் வராமல் இருப்பதற்கான வேலைகளை பார்ப்பதற்கு முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தி வருகிறார். ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரணத் தொகை அறிவித்திருக்கிறார். இந்த ஆண்டில் முதல் துக்க நிகழ்வாக இது நடந்துள்ளது. இதுபோல் இனிமேல் வராமல் இருப்பதற்கான வேலைகளை பார்ப்போம். – விருதுநகரில் நடைபெற்ற வெடி விபத்து குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

News January 4, 2025

மதுரை NH- 154ஐ அகலப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு

image

மதுரை : சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, மதுரை மாவட்டத்தில் மாநில NH-154ஐ அகலப்படுத்தவும், பலப்படுத்தவும், 6 கி.மீ. தொலைவுக்குப் பாதுகாப்பு மற்றும் வடிகால் பணிகள், மண்டல சாலை உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.18.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News January 3, 2025

அமைச்சர் தலைமையில் திமுக செயல் வீரர்கள் கூட்டம்

image

மதுரை மாவட்டத்தில் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை துவக்கி வைக்க வருகை தரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை எழுச்சியோடு வரவேற்பது மற்றும் கட்சியின் ஆக்கப்பணிகள் தொடர்பான மதுரை வடக்கு மாவட்ட செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஆலத்தூரில் உள்ள பிஆர் மகாலில் வணிக வரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று(ஜன.3) நடைபெற்றது.

error: Content is protected !!