Madurai

News January 9, 2025

மாற்றுப் பாதையில் ரயில்கள் இயக்கம்

image

மதுரை அருகே உள்ள கூடல் நகர் ரயில் நிலையத்தில் (ஜன.9) ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற இருக்கிறது. இந்த பணிகள் காலை 10.35 மணி முதல் மாலை 05.35 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக மதுரை, திண்டுக்கல் வழியாக இயக்கப்பட வேண்டிய 9 ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது.

News January 9, 2025

டங்ஸ்டன் விவகாரத்திற்கு அதிமுக தான் காரணம்: அமைச்சர்

image

டங்ஸ்டன் உள்ளிட்ட கனிம சுரங்கங்களை ஒன்றிய அரசே ஏலம் விடலாம் என்ற சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் ஆதரித்தது அதிமுக தான். இது தான் இந்த பிரச்னையின் மூலம். இன்றைக்கு அரசியல் ஆதாயத்திற்காக இப்பிரச்னையில் குளிர்காய நினைக்கிறீர்கள்” என பேரவையில் நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு காட்டமாக பேசி உள்ளது மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 9, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று (08.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

நாளை தாமதமாக புறப்படும் ரயில்கள்

image

மதுரை திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் ஜனவரி 9 அன்று மதுரையிலிருந்து மாலை 05.50 மணிக்கு தாமதமாக புறப்படும். நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் ரயில் ஜனவரி 9 அன்று நாகர்கோவிலில் இருந்து மதியம் 02.50 மணிக்கு காலதாமதமாக புறப்படும். திருச்செந்தூர் வாஞ்சி மணியாச்சி ரயில் ஜனவரி 10 அன்று திருச்செந்தூரில் இருந்து மாலை 03.40 மணிக்கு தாமதமாக புறப்படும்.

News January 8, 2025

அரசு பாரில் முதல்வர் புகைப்படம் வைக்க கோரிக்கை 

image

மதுரை மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் புதூர் சரவணன் என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு டாஸ்மார்க் பாரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என மனுவினை, முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்துடன் சேர்த்து பாஜகவினர் வழங்கினர்.எங்களது கொள்கையும் பூரண மது விலக்குதான் ஆனால் அரசு அதை நோக்கி நகரவில்லை முதல்வர் படத்தை வையுங்கள் என்றனர்.

News January 8, 2025

வேன் மீது டூ வீலர் மோதியதில் கல்லூரி மாணவர் பலி

image

ராஜபாளையம் செவல்பட்டியை சேர்ந்த விக்னேஷ் பாண்டி (22),யுவராஜ் (19) கல்லூரி மாணவர்கள் இருவரும் டூவீலரில் ராஜபாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் சென்றனர். வழியில் சமயநல்லூர் பாலத்தில் முன்பாக சென்ற வேனின் பின்புறம் டூ வீலர் மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில்,  சிகிச்சை பலனின்றி யுவராஜ் பலியானார்.

News January 8, 2025

ரூ1.50 கோடி மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை

image

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த 10 உப கோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் மாதம் ஒரு முறை எண்ணப்படும். அதன்படி டிசம்பர் மாதத்திற்கான அனைத்து கோவில்களின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. கோவிலில் இணை கமிஷனர் கிருஷ்ணன், அறங்காவலர்கள் தலைமையில் நடந்த இந்த பணியில் ரூ 1 கோடியே 65 லட்சத்து 50 ஆயிரத்து 107 ரூபாயும் 358 கிராம் தங்கமும் 839 கிராம் வெள்ளி ஆகியவை கிடைக்கப்பெற்றது.

News January 8, 2025

திருநங்கை விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

2024-25ஆம் ஆண்டிற்கான திருநங்கையர் தினம் ஏப்.15 கொண்டாடப்பட உள்ளது. தங்கள் சொந்த முயற்சியால் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில், ‘முன்மாதிரி விருது’ ரூ.1 லட்சம் காசோலை மற்றும் சான்றிதழுடன் வழங்கப்படுகிறது. விபரங்களை தமிழக அரசின் விருதுகள் awards.in.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை பிப்.10க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

பால் வழங்கி நூதன போராட்டம்

image

பசும்பால் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி வழங்கவும், ஆண்டு தோறும் பாலுக்கு விலை நிர்ணயம், 50 சதவீதம் மானியத்தில் தீவனம், ஆவின் நிர்வாகம் பொங்கலுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் இலவசமாக பால் வழங்கி ஆர்ப்பாட்ட போராட்டம் நடத்தினர்.

News January 7, 2025

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளின் எண்ணிக்கை வெளியீடு 

image

மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் அலங்காநல்லூரில் 5786, அவனியாபுரத்தில் 2026,பாலமேட்டில் 4820 காளைகளும் அவிழ்த்து விடப்பட உள்ளது. மேலும்  அலங்காநல்லூரில் 1698, அவனியாபுரத்தில் 1735, பாலமேட்டில் 1914 மாடுபிடி வீரர்களும் பங்கேற்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 

error: Content is protected !!