India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற திருமங்கலம் ஆட்டுச் சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 20 ஆயிரத்துக்கும் மேலான ஆடுகள் 4 கோடி ரூபாய் வரை விற்பனையானது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆட்டின் விலை 3000 ரூபாய் வரை கூடுதலாக விற்பனையானதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர்.
மதுரை அனைத்து மத்திய சிறைகளிலும் கைதிகள் தயாரிக்கும் பொருட்கள் விற்பனையில் ஊழல் நடந்திருப்பதாக சமீபத்தில் தெரிய வந்ததைத் தொடர்ந்து, 4 சரக சிறைத்துறை டிஐஜிக்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். மதுரை டிஐஜி பழனி திருச்சி டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். அதேபோல் சென்னை சரக டிஐஜி முருகேசன், மதுரை சரக சிறைத்துறை டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை கலெக்டர் சங்கீதா, மேலூரில் டங்ஸ்டன்க்கு எதிராக போராடும் மக்களை நேற்று சந்தித்து விட்டு, காரில் மதுரை திரும்பினார். கார் உயர்நீதிமன்றம் அருகே வரும் போது, பின்னால் வேகமாக வந்த கார் ஆட்சியரின் கார் மீது மோதியதில், காரின் பின்பகுதியில் லேசான சேதம் ஏற்பட்டது, ஆட்சியர் உயிர் தப்பினார். விசாரணையில், கார் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி வரிச்சூர் செல்வம் கார் என தெரிய வந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் இன்று இரவு (ஜனவரி 9) ரோந்து பணியில் காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வழியாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண் வழங்கப்பட்டுள்ளது.
மதுரை, மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு வழங்கிய ஏல உத்தரவை முழுமையாக ரத்து செய்யும் வரை ரேசன் பொருட்கள் உள்ளிட்ட அரசின் எந்த சலுகையும் வேண்டாம் என அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர். 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை கொண்ட மக்கள், ரேசன் பொருட்கள் வாங்க மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில(06569) இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெங்களூருவில் இருந்து 10ஆம் தேதி இரவு 10 மணிக்கு கிளம்பும் சிறப்பு ரயில் மதுரை, விருதுநகர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி செல்லும். மறுமார்கமாக தூத்துக்குடியிலிருந்து 11ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6.30 மணிக்கு மைசூர் சென்றடையும்.
மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு பாதையின் நுழைவு வாயிலிலும் இந்த கோடினை கி.யூ.ஆர்.பக்தர்கள், வாகன ஓட்டிகள் தங்களது மொபைல் போனில் ஸ்கேன் செய்து மேற்படி வாகன நிறுத்தத்திற்கு எளிதாக சென்று நிறுத்திக் கொள்ளலாம். பின்பு அங்கிருந்து ஆட்டோக்கள் அரசு மினி பேருந்துகள் மூலமாக திருக்கோவிலுக்கு சென்று பயன்பெற மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
போடி – மதுரை ரயில் பாதை மின் பாதையாக மாற்றும் பணி முடிவடைந்த நிலையில், திடீரென எந்தவித முன்னறிவிப்புமின்றி மதுரையிலிருந்து போடிக்கு ‘ஆக்சிலேசன் மானிட்டரிங் சிஸ்டம்’ என்றழைக்கப்படும் ரயில் பாதை அதிர்வுகளை கணக்கிடும் நவீன கருவிகளுடன் கூடிய 3 பெட்டிகள் அடங்கிய ரயில் இயக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. 110 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்ட இந்த ரயில் செவ்வாய்கிழமை இரவு போடி சென்று மதுரை திரும்பியது.
மதுரை : வெங்கடேசன் எம்பி நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரக் கணக்கான மக்கள் கூடிய டங்ஸ்டன் எதிர்ப்பு பேரணியில், DYFI மாவட்ட செயலாளர் தமிழரசனை மட்டும் வலுக்கட்டாயமாகத் தாக்கி, இழுத்துச் சென்று காவல் துறை காரில் ஏற்ற முயன்றது ஏன்? காவல் துறையின் இந்த அராஜக நடவடிக்கை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசுஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் 11/2 கோடி மோசடி நடந்ததாக பதிவான வழக்கில் சிறை சூப்பிரண்டு ஊர்மிளா உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி, ” மோசடி நடந்ததாக பதிவான வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மனுதாரர்கள் முன்ஜாமீன் கோருவது ஏற்புடையதல்ல” என்று கூறி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
Sorry, no posts matched your criteria.