India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அவனியாபுரத்தில் நாளை நடக்கவுள்ள ஜல்லிகட்டை முன்னிட்டு மதுரையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம். அவனியாபுரம் பைபாஸ் ரோடு பெரியார் சிலை சந்திப்பிலிருந்து அவனியாபுரம் நகருக்குள் செல்லவும் அவனியாபுரம் அம்பேத்கர் சிலை சந்திப்பு வழியாக திருப்பரங்குன்றம் செல்லவும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.ஹர்சிதா மருத்துவமனை-மருதுபாண்டியர் சிலை சந்திப்பிலிருந்து அய்யனார் கோயில் வழியாக அவனியாபுரம் செல்ல அனுமதி இல்லை.
மதுரை மாவட்டத்தில் இன்று (12.01.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சோழவந்தானில் யார் அந்த சார் என்ற ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், “ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. தற்போது ஆன்லைன் திட்டம் நடைபெறுகிறது. ஆனால் இதுவரை உள்ளூர் காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்களுக்கு டோக்கன் வரவில்லை” என்று மக்கள் புகார் அளித்து வருகிறார்கள் என கூறினார்.
மதுரையில் மார்ச் மாதம் குடிநீர் திட்டப் பணிகள் விழா நடைபெற உள்ளது. முதல்வர் தலைமையில் இவ்விழா நடைபெறும் என அமைச்சர் கே.என்.நேரு உத்தங்குடியில் நடைபெற்ற திட்டப்பணிகள் தொடக்க விழாவில் தெரிவித்துள்ளார். மேலும் மதுரைக்கு மட்டும் ரூ.5,000 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை முதலமைச்சர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்.
மதுரையை சேர்ந்த பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயபாய் இன்று(ஜன.12) வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு மேல்மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயபாய் மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மதுரை திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றியவர் ஜெயபாண்டி. இவர், கடந்த டிச.13ம் தேதி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோயிலுக்கு வந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார். நேற்று அவரை போக்சோவில் கைது செய்து நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் கனகு என்ற கனகராஜ். இவர் மீது எண்ணூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கொலை உட்பட குற்ற வழக்குகள் உள்ளது. தனிப்படை போலீசார் இவரை தேடி வந்த நிலையில், மதுரை ஆரப்பாளையம் பகுதியில் டவர் விடுதியில் பதுங்கி இருந்த இவரை, இன்று தனிப்படை போலீசார் துப்பாக்கியுடன் முனையில் சுற்றி வளைத்து கைது செய்து சென்னை கொண்டு சென்றனர்.
மதுரை மேலூர் திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு 133 அடி உயரத்தில், 70 அடி அகலத்தில், 1330 வினாடிக்குள் 133 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து மண் தரையில் அடுப்புடன் கூடிய பொங்கல் பானையினை பல்வேறு வண்ணங்களில் பிரம்மாண்டமாக கோலமாக வரைந்து உலக சாதனை படைத்துள்ளனர். இதனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
‘டங்ஸ்டன்’ சுரங்கம் அமைவதை எதிர்த்து போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்காக சட்டமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ்க்கு நன்றி என, மேலூர் பொதுமக்கள் சார்பாக நன்றி என10-க்கும் மேற்பட்டபெயர்களுடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மேலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர் பேசு பொருளாகியுள்ளது.
மதுரை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, யார் அந்த சார்? என்று சட்டமன்றத்தில் விவாதம் எழுந்து வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “2சார்கள்தான் சொல்ல வேண்டும்” என நகைச்சுவையாக பேசி சிரித்துவிட்டு காரில் ஏறி பெரியகுளம் புறப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.