Madurai

News April 5, 2025

உணவு ஆர்டர் பெயரில் மோசடி.. போலீஸ் எச்சரிக்கை 

image

இணையதளங்களில் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மதுரை மாநகர காவல் துறையினர் மதுரை மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், தாங்கள் ஆர்டர் செய்யாத உணவு, தங்களுக்கு வந்திருப்பதாக கூறி அதை திருப்பி அனுப்ப OTP கேட்கும் நபர்களிடம் எந்த விபரமும் தெரிவிக்க வேண்டாம் என்று மதுரை மாநகர் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

News April 5, 2025

விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை விமான நிலையத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து பின்னர் தனி விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். பிரதமரின் வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து வாகனங்களும் காவல்துறையினரின் பலத்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுகிறது.

News April 5, 2025

மதுரை மக்களே உஷார்: பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை

image

மாநிலத்தின் பல பகுதியில் தக்காளிக்காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இது தோலில் சிவப்பு நிற அரிப்பு ஏற்படுத்தும் மற்றும் பரவும் அபாயம் உள்ள நோயாகும். தங்கிய நீர், அசுத்தமான சூழல் போன்றவை இதன் முக்கிய காரணங்கள் என்பதால், பொதுசுகாதார நிபுணர்கள் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். காய்ச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

News April 5, 2025

மதுரையில் டெங்கு பாதிப்பு குறைந்தது- சுகாதாரத்துறை அதிகாரிகள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 530 கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் டெங்கு ஒழிப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டமிட்ட நடவடிக்கையின் பயனாக, 2023ஆம் ஆண்டில் இருந்த 835 டெங்கு பாதிப்பு 2024ஆம் ஆண்டில் 348 ஆகக் குறைந்துள்ளது, இது 41.48% குறைவாகும். மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான சுகாதார நடவடிக்கைகள் மக்களிடையே நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 5, 2025

மதுரையில் ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி, சர்வீஸ் இன்ஜினியர்,மேலாளார் உள்ளிட்ட காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு பட்டப்படிப்பு படித்த 20 வயது முதல் 40 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் தகுதிகேற்ப ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்படும். <>இங்கு கிளிக் செய்து<<>> இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யுங்க.

News April 5, 2025

மதுரையில் ஏப்.10ம் தேதி டாஸ்மாக் இயங்காது

image

மதுரையில் மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஏப்.10ம் தேதி மது கடைகள் மற்றும் மது கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட மாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்கு மாறாக மது விற்பனை ஏதும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News April 5, 2025

மதுரை மாவட்ட ரோந்து காவலர்கள் விபரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (04.04.2025) இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உதவி தேவைப்படின் இரவு ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் அவசர உதவி ஏதேனும் தேவைப்பட்டால் 100 இல் தொடர்பு கொள்ளலாம்

News April 4, 2025

சிபிஐ(எம்) மாநாட்டில் பங்கேற்கும் பிரபலங்கள்

image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நடிகர் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி மற்றும் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் பங்கேற்கும் மாநாட்டு கலை நிகழ்ச்சிகள் இன்று (ஏப்.04) மாலை 5 மணிக்கு மதுரை தமுக்கம் திறந்தவெளி அரங்கில் நடைபெறுகிறது. 

News April 4, 2025

மதுரை மாநகராட்சி பகுதியில் 1 லட்சத்திற்கு மேல் தெரு நாய்கள்

image

மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சுமார் ஒன்றரை லட்சம் நாய்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கருத்தடை செய்யாதது ஆண் பெண் நாய்கள் மாநகராட்சி எந்த மண்டலத்தில் அதிக நாய்கள் உள்ளன கட்டுப்படுத்தும் நடைமுறைகள் என்ன என்ற பல்வேறு தலைப்புகளில் கணக்கீடுகள் வழிமுறைகள் வகுக்கப்பட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. சில நாட்களில் விலாவாரியாக முழுமையான கணக்கிட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

News April 4, 2025

மதுரையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

மதுரை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை நிர்வாகி காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு10ம் வகுப்பு படித்த 18 வயது முதல் 25 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். முன் அனுபவம் தேவையில்லை. <>இங்கு கிளிக்<<>> செய்து இந்த மாதம் 30-க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்யுங்க.

error: Content is protected !!