India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மீனாட்சியம்மன் கோயில் பராமரிப்பில் உள்ள புதுமண்டபத்தின் மைய பகுதியில் தான் பழங்காலத்தில் ஓலைகளில் தயாரான ஏடுகளை புத்தகங்களாக மாற்றி அதை விற்க புத்தக கடைகள் முதன்முதலில் அமைக்கப்பட்டன. 1942 மார்ச் 6ல் அருங்காட்சியகத்துடன் அமைந்த நுாலகத்தை அன்றைய சென்னை மாகாண கவர்னர் திறந்து வைத்தார். இதை மதுரையின் முதல் பொது நுாலகம் எனலாம். இது பற்றி தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.
தமிழக முழுவதும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று தமிழ் மொழித்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு மதுரை பள்ளியில் உள்ள மாணவர்கள் தமிழ் பாடத்துக்கு விண்ணப்பித்த 33,814 பேரில் மாணவ மாணவிகளில் 610 பேர் தேர்வெழுத வரவில்லை. 33 ஆயிரத்து 204 பேர் தமிழ் தேர்வு எழுகினர். பிரெஞ்சு மொழி பாடத்துக்கு விண்ணப்பிக்கு 462 பேரும் தேர்வெழுதினர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் அம்மன் சிலை மரகதகல்லால் செய்யப்பட்டது. சித்திரைத் திருவிழாவுக்கு தனிச்சிறப்பு இருந்தாலும் மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில் 274 நாள்கள் திருவிழா நடைபெறும். சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளும்போது தரிசனம் செய்வது சிறப்பு. சித்திரைத் திருவிழாவின் 2 ,12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளிகிறார்.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் மாசி மண்டலத் திருவிழா இன்று (03.03.2025) காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. பெரியசுவாமி உற்சவம் தொடங்கியுள்ள நிலையில், மீனாட்சி சொக்கர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2,292 காலிப் பணியிடங்கள் உள்ளன. மதுரை மாவட்டத்திற்கு 45 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசி நாள். இந்த லிங்கை <
உசிலம்பட்டி அருகே வில்லாணியைச் சேர்ந்தவர் விஜயகுமார் 29. பெற்றோர் இறந்து போன நிலையில் திருமணம் ஆகாமல் வீட்டில் தனியாக வசித்தார். இந்நிலையில் சில நாட்களாக தன்னை யாரோ அழைப்பது போன்ற கனவு வருவதாக கூறிவந்துள்ளார். நேற்று சகோதரர் ராமு வீட்டிற்கு சென்றவர், அனைவரும் வெளியே சென்றிருந்த நேரத்தில் வீட்டில் இருந்த அரிவாளால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு உயிரிழந்தார். போலீசார் விசாரணை.
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே ஆன்லைன் மோசடி தொடர்பான பல்வேறு புகார்கள் மதுரை மாவட்ட காவல்துறைக்கு வந்துள்ளது. அதன் அடிப்படையில் முதல் கட்டமாக 10 வகையான மோசடிகள் தொடர்பான விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும், ஏதேனும் மூன்றாம் நபர் தங்களை தொடர்பு கொண்டு பேசினால் உடனே காவல்துறைக்கு தகவல் தர வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரையில் நடைபெற உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டினை முன்னிட்டு மாநாட்டின் இணைய தளத் துவக்க மற்றும் இசை வீடியோ வெளியீட்டு நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு மதுரை காலேஜ் ஹவுஸ் அருகே உள்ள சபரீஸ் பார்க் ஹோட்டலில் நடைபெற உள்ளது. அனைவரும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற கல்யாண விருந்தில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மட்டன் சுக்கா விருந்து அருமையாக இருந்ததாக தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மதுரை என்றாலே அசைவ விருந்துக்கு எப்போதும் தனி ருசி என்பதை இந்த புகைப்படம் வெளிப்படுத்துகிறது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க கன்னியாகுமரி மும்பை இடையே ஒரு சிறப்பு ரெயில் இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் – கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (01005) மும்பையில் இருந்து 10 & 17 தேதிகளில் (திங்கள் கிழமை) அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12.15 மணிக்கு குமரி வந்து சேரும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.