India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடியின் மனைவியும் சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவருமான தேவி, கிராம ஊராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது செல்லாது என கடந்த 23 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவால் சங்கராபுரம் ஊராட்சி தலைவராக தேவி பதவியில் தொடர தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அழகர்கோவில் மலை மேல் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டித் திருவிழா நவ.2 முதல் நவ. 8 வரை 7 நாட்கள் நடைபெற உள்ளது. முதல் நாள் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, காப்பு கட்டுதல், யாகசால பூஜைகளுடன் விழா தொடங்கும். அன்று அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற உள்ளது. இதே போல் 7 நாட்களும் விழா நடைபெறும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
வரலாறு காணாத அளவிற்கு மதுரையை புரட்டிப்போட்ட கனமழையினால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மதுரையின் மழை பாதிப்பு குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மைச் செயலாளர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் காணொளி காட்சி மூலம் அவசர ஆய்வு கூட்டம் நடத்தினர். அப்போது வெள்ள பாதிப்புகளை சரி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மதுரை மாநகரில் இன்று மாலை பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பி.பி.குளம், முல்லை நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை அகற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா நேரில் ஆய்வு கொண்டார்.உடன் மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார்,மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்பட பலர் உள்ளனர்.
மதுரையில் இன்று வரலாறு காணாத மழை பெய்ததால் 15 க்கும் மேற்பட்ட இடங்களில் மழை நீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களை அருகே உள்ள பள்ளிகளில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மழை நீடித்தால் இரவு முழுவதும் அவர்களை அங்கு தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தென்னக ரயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரயில் எண்.06088 ஷாலிமார் – திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் ஷாலிமாரில் இருந்து அக்டோபர் 26 அன்று காலை 17.10 மணிக்குப் புறப்பட வேண்டிய சிறப்பு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் 15 நிமிடங்களில் 45 மில்லி மீட்டர் மழை பொழிவு மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் இன்று மதியம் 3 மணி முதல் 3.15 மணி வரை செய்த மழைத்தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதில் 15 நிமிடங்களில் சுமார் 45 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் 2024- 2025 ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வியில் சேர்ந்து முதலாம் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு Online-ல் விண்ணப்பித்திட புதுதில்லி மைய முப்படைவீரர் வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் 30.11.2024 தேதிக்குள் www.ksb.gov.in இணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்வுக்கு என்னென்ன வாகனங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகம், காவல்துறை தான் முடிவு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு வாடகை வாகனங்களிலும் செல்ல அனுமதிக்க கோரி உசிலம்பட்டி சங்கிலி தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரம் எஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
➤ உலக உடற்காய தினம், மதுரை அரசு மருத்துவமனை,காலை 11 மணி
➤ இலவச தீபாவளி புத்தாடைகள் உணவு வழங்கும் நிகழ்ச்சி, நகர்புற வீடற்றோர் தங்கும் இல்லம், தானப்ப முதலி தெரு, காலை 11 மணி
➤ சுய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம், காந்தி மியூசியம், காலை 10.30 மணி
➤ பள்ளி குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளி, கென்னட் கிராஸ் ரோடு, காலை 9 மணி
Sorry, no posts matched your criteria.