Madurai

News October 30, 2024

தேவர் ஜெயந்தி விழா மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம்!

image

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் உட்பட கட்சி தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வாய்ப்பு உள்ளதன் காரணமாக மதுரை கோரிப்பாளையம் நோக்கி செல்லக்கூடிய வாகனங்களுக்கு இரண்டாவது நாளாக போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2024

கால்வாயில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

image

மதுரை மாநகராட்சி பீ.பீ.குளம், இந்திரா நகர் பகுதி கால்வாயில் உள்ள மண் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று(அக்.29) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ரானா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

News October 29, 2024

மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான் முதல்வர் – சசிகலா

image

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை வந்த வி.கே சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். விஜயின் மாநாடு குறித்து பேசிய அவர், யார் வேண்டுமென்றாலும் கட்சி தொடங்கலாம். அதை யாரும் தடுக்க முடியாது. கட்சி ஒன்றிணைப்பது குறித்த கேள்விக்கு: நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். அது எங்களின் வேலை. மக்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்தான். இன்னும் ஒரு ஆண்டு தான் உள்ளது. உங்களுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது எனக் கூறினார்.

News October 29, 2024

மதுரைக்குள் கனரக வாகனங்கள் வர தடை

image

நாளை தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோரிப்பாளையம் பகுதியில் இருக்கும் தேவர் சிலைக்கு தலைவர்கள், சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மரியாதை செலுத்துவார்கள். இதனால் நாளை காலை 6:00 மணி முதல் இரவு 10:30 மணிவரை கனரக வாகனங்கள் நகர் பகுதிக்குள் வர தடை விதித்து மாநகர காவல் துறையினர் உத்தரவு. மீறிவரும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News October 29, 2024

மதுரை ஐகோர்ட் (இமானுவேல் சேகரன் மணிமண்டபம்) உத்தரவு!

image

இமானுவேல் சேகரனாருக்கு மணிமண்டபம் கட்டுவது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. அரசாணை வெளியிட்டு ஒரு வருடமான நிலையில் மனு தாக்கல் செய்வது ஏற்புடையது அல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News October 29, 2024

மதுரையில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் முகாம்

image

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை கிடைக்கப் பெறாதவர்களுக்காக வட்டார வாரியாக சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மதுரையில் நவ. 6, 8, 9,13,15,16 20,22,23,27 ஆகிய நாட்கள் அண்ணா பேருந்து நிலையத்தில் உள்ள அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவில் நடைபெறுகிறது. *பயனுள்ளவர்களுக்கு பகிரவும்*

News October 29, 2024

ஓபிஎஸ் வழக்கை விசாரிக்க மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவு!

image

மதுரை : முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று(அக்.29) உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை தினமும் நடத்தி 2025 ஜூன் மாதத்திற்குள் முடிக்க “மதுரை சிறப்பு நீதிமன்றத்திற்கு” உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்களை மதுரை எம்.பி., எம்.எல்.ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்திற்கு 4 வாரங்களில் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News October 29, 2024

மதுரை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News October 29, 2024

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு விடுமுறை அறிவிப்பு!

image

மதுரை புதுநத்தம் சாலையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான நபர்கள் நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.31 (வியாழக்கிழமை) அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.

News October 29, 2024

டைடல் பார்க் இடத்தில் அமைச்சர் ஆய்வு

image

மதுரை மாட்டுத்தாவணி அருகில் டைடல் பார் அமைய உள்ளது. இதற்கான இடத்தில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் பி.ஆர்.பி ராஜா நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.எல்.ஏ கோ. தளபதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். டைட்டில் பார்க் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கி 2026 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் என தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.