India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரை மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு மாணவ, மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். 1330 குறட்பாக்களையும் முழுமையாக
ஒப்புவிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 15,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும். ஆர்வம் உள்ளவர்கள் வரும் 25ம் தேதிக்குள் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள வேட்டையன் படத்தில் வரும் ‘புகழ்பெற்ற என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ மற்றும் என்கவுன்டர் என்பது தண்டனை மட்டுமல்ல, குற்றங்களைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கையும் கூட என்ற வசனத்தை முற்றிலும் நீக்கவும் அதுவரை படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி மதுரை ஐகோர்ட் மதுரை பழனிவேல் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று(அக்.03) விசாரணைக்கு வர உள்ளது.
மதுரையில் தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் அரசு மருத்துவமனை முன் நேற்று(அக்.02) மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பிரகாஷின் தற்கொலைக்கு காரணமான ராஜாவை கைது செய்ய வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு பின் போராட்டம் கைவிடப்பட்டது.
தஞ்சையைச் சேர்ந்த காளீஸ்வரன் (28) மதுரை கே.கே நகர் பகுதியில் இயங்கும் மதனமீரானுக்கு சொந்தமான வெளிநாட்டு வேலை வாய்ப்பு மையத்தில் வெளிநாட்டு வேலைக்காக நாடி உள்ளார். வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாக காளீஸ்வரனிடம் ரூ.12 லட்சம் பெற்ற மதனமீரான் வேலை வாங்கி கொடுக்காமல் 3 லட்சத்தை மட்டும் திருப்பி செலுத்திவிட்டு ரூ.9 லட்சத்தை மோசடி செய்துள்ளார். காளீஸ்வரன் புகாரில் மதனமீரான் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.
திருநெல்வேலி பகுதியில் ரயில்வே தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் ரயில் எண்.06674/06409 திருச்செந்தூர் – திருநெல்வேலி – திருச்செந்தூர் தினசரி பயணிகள் ரயில் வரும் 04.10.2024 முதல் 08.10.2024 வரை 5 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
மண்ணுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் இயற்கை மூலிகை பூச்சிவிரட்டியை விவசாயிகள் சொந்தமாக தயாரிக்கும் வகையில் வேளாண் துறை சார்பில் ஆடாதொடை, நொச்சி கன்றுகள் வழங்கப்படுவதாக வேளாண் துணை இயக்குநர் மேரி ஐரீன் ஆக்னட்டா தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டத்திற்கு ஒன்றரை லட்சம் ஆடாதொடை, நொச்சி கன்றுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் இதனை பெற அந்தந்த வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.
மதுரை அக்ஷயா டிரஸ்ட் ஆதரவற்றோர் காப்பகத்தில் இயற்கை மரணம் அடைவோரை உடற் கூராய்வு மேற்கொள்ளாமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்க கோரிய மனு மீதான விசாரணையில், மதுரை மாவட்ட ஆட்சியர், எஸ்பி, மாவட்ட சமூக நல அலுவலர் ஆகியோர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளார். ஆதரவற்றோர் காப்பகத்தில் மரணமடைவோர் இயற்கை மரணம்தானா?அல்லது வேறு ஏதேனும் மரணமா? எனவும் கேள்வி எழுப்பியது.
இந்திய அஞ்சல் துறையின் சார்பாக மதுரை மாவட்டம் முள்ளிப்பள்ளம் வ.உ.சி மகாலில் நாளை ( 3-10-2024) காலை 10 மணி முதல் மாலை 04.00 மணி வரை ஆதார் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பிழை திருத்தம்,
முகவரி மாற்றுதல், போன் நம்பர் மாற்றுதல்
புகைப்படம் எடுத்தல், கைரேகை மறு பதிவு போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளன. எனவே பொதுமக்கள் முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அஞ்சல் துறை அறிவுறுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கிட வரும் 09.10.2024ம் தேதி அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். முகாமில் பங்கேற்பு விருப்பம் உள்ளவர்கள் QR கோடு மூலம் ஸ்கேன் செய்தோ, 8778945248 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
உதயநிதியை துணை முதலமைச்சராக்கிவிட்டனர் என்ற குழப்பத்தில் நிதானம் இல்லாமல் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.