India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுரையில் பல்வேறு கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததாக வில்லாபுரம் அரிமணி (22), கார்த்தி (23), வடிவேல் (34), பெத்தானியாபுரம் சக்தி (23), பெருங்குடி செல்வம் (24) ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவர்களை மதுரை மத்திய சிறையில் அடைக்க ஆணையாளர் லோகநாதன் உத்தரவிட்டார்.
புதிதாக வடிவமைக்கப்படவுள்ள படுக்கை வசதியுடைய வந்தே பாரத் ரயில்களில் ஒன்றை மதுரை வழியாக ராமேஸ்வரம் – ஐதராபாத் இடையே இயக்க தென்னக ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் தெற்கு ரயில்வே, தெற்கு,மத்திய ரயில்வேகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை வழியாக தெலுங்கானாவின் ஐதராபாத்திற்கு இயக்கினால் ஆன்மிக சுற்றுலா செல்வோர், தொழில்முனைவோர், மென்பொறியாளர்கள் பெரிதும் பயனடைவர்’ என பயணிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
மதுரை மாநகரில் நாளை மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே பாரதி உலா வீதி, ஜவஹர் வீதி, பெசன்ட் ரோடு, அண்ணாநகர், சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, ரேஸ்கோர்ஸ், கோகலே ரோடு,பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி., வீதி, வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ., காலனி, பாத்திமா நகர், புதுார் வண்டிப் பாதை, நத்தம் வீதி, ரிசர்வ் லைன், கலெக்டர் பங்களா, அழகர் கோவில் ரோடு பகுதியில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை.
மதுரை ஆட்சியர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- மீனவ சமுதாயத்தை சார்ந்த பட்டதாரி இளைஞர்கள் இந்திய குடிமைப்பணிகளில் சேருவதற்கான போட்டித்தேர்வில் கலந்து கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தகுதியுடைய இப்பயிற்சிக்கான விண்ணப்ப படிவங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து(நவ.5) மாலை 5.00 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
நாளை நடைபெறவுள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குலசேகரபுரம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த கமலஹாரிஸ் வெற்றி பெற வேண்டி மதுரை S.S.காலனி பகுதியில் உள்ள அனுஷனத்தின் அனுகிரகத்தின் சார்பில் சிறப்பு புஷ்பாஞ்சலி பிரார்த்தனை நேற்று(நவ.4) நடைபெற்றது. இதில் அந்த பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோருக்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும், ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் இந்த மருந்தகங்களுக்கு விண்ணப்பிக்க B-Pharm / D-Pharm சான்று பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தொடர்ந்து வரதட்சணை கொடுமை புகார் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரதட்சணை சார்ந்த புகார்களுக்கு உடனடியாக 181 என்ற உதவி எண்ணிற்கோ அல்லது 8300021100 என்ற கைப்பேசி எண்ணிற்கோ புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்திற்கான தேர்வு முகாம் கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வரும் நவ.8ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. எனவே ராணுவத்தில் சேர ஆர்வம் உள்ள தகுதியுடைய இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பட்டாசு வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கருவிழியில் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.குறிப்பாக அதில் நான்கு குழந்தைகளுக்கு முற்றிலும் கண் பாதிப்பு ஏற்பட்டு கண்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே குழந்தைகள் எதிர்காலம் கருதி பட்டாசு வெடிக்கும் போது மிகவும் கவனமாக கையாள வேண்டும் என அரவிந்த் கண் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அலங்காநல்லூர் அருகே அழகாபுரியை சேர்ந்த பிரசாத்- சிவரஞ்சனி தம்பதியின் 2 வயது மகள் சுபாஷினி வீட்டின் அருகே தோட்டத்தில் கொண்டிருந்த போது அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. உடனே அருகில் குழந்தையின் உடலை புதைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை, வருவாய் துறையினர் புதைக்கப்பட்ட சிறுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.