Madurai

News November 28, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை 

image

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களின் உண்டியல்கள் நேற்று(நவ.27) திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில் ரொக்கம் ரூ.1,25,91,921,  தங்கம் 482 கிராம், வெள்ளி இனங்கள் 846 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 260 எண்ணம் கிடைத்துள்ளது என மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News November 28, 2024

மதுரை மாநகர இரவு ரோந்து பணி காவல் அதிகாரிகளின் விபரம் வெளியீடு

image

மதுரை மாநகர இரவு ரோந்து பணி(நவ.27) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் தெற்கு வாசல் கோவில், தெற்கு வாசல், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல், செல்லூர், அண்ணா நகர் போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி செய்யும் காவலர்களின் பட்டியல் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News November 27, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி விபரம் வெளியீடு

image

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி இன்று(நவ.27)காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி உள்ளிட்ட மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டன.

News November 27, 2024

சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது மோதிய கார்

image

மதுரை – ராமநாதபுரம் பிரதான சாலையாக விரைவு சாலை அமைந்துள்ளது. திருப்புவனம் பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்ற ஆட்டோ மீது அந்த வழியே சென்ற கார் மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் ராஜாங்கம்(55) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 27, 2024

மதுரை: பகல் ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.27) பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள போலீசார் எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 27, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்

image

மதுரை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் உங்களை தேடி உங்கள் ஊரில் என சிறப்பு முகாம் நடைபெற்றது வருகிறது அதன்படி இன்று அவனியாபுரம் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அவனியாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியை ஆய்வு செய்தார். உடன் பள்ளி தலைமையாசிரியர் இருந்தனர்.

News November 27, 2024

2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

image

2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்.அதற்குள் திருப்பணிகளை முடிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.முதல்வர் அறிவித்தபடி நடத்த வேண்டும் என்பதாலும், சட்டசபை தேர்தல் அறிவிப்பு வெளியானால் பணிகள் தடைபடும் என்பதால், 2026 ஜன.26ல் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை நாள் குறித்துள்ளது.

News November 27, 2024

கோவிலில் காணிக்கையாக குவிந்த ஆயுதங்கள்

image

உலக பிரசித்தி பெற்ற மதுரை அழகர் கோயிலில் கடந்த 13ம் தேதி நடந்த தைலக்காப்பு நிகழ்வை ஒட்டி பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்திய தங்கம், வெள்ளி பொருட்கள் வந்துள்ளது குறிப்பாக 92 கிராம் தங்கம், 1 கிலோ 190 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது.

News November 26, 2024

CA தேர்வு தேதியில் மாற்றம் செய்து அறிவிப்பு

image

தமிழ்நாட்டில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படும் (14.01 2025) அன்று மத்திய அரசு நடத்தும் CA தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்குமாறு மதுரை எம்.பி சு. வெங்கடேசன் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் (ஜன.14) பொங்கல் அன்று நடைபெற இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வை ஜனவரி 16 ஆம் தேதி மாற்றி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News November 26, 2024

டங்க்ஸ்டன் சுரங்கம் – வைகோ கண்டனம்

image

மதுரை வட்டாரத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தா குழுமத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்குவதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரிட்டாபட்டி பகுதியை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட் போன்ற மற்றுமொரு சுற்றுச்சூழல் சீரழிவிற்கு இடம் அளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!