Madurai

News December 11, 2024

வருவாய்த்துறை போராட்டம் 97.6% பேர் விடுப்பு

image

மதுரை மாவட்டத்தில் 3 வருவாய் துறை அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அவர்களுக்கு ஆதரவாக மாவட்ட முழுவதும் தாசில்தார் கிராம நிர்வாக அலுவலர் கிராம உதவியாளர் என சுமார் 1571 பேர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். குறிப்பாக 97.6 சதவீதம் பேர் விடுப்பு எடுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News December 11, 2024

மதுரையில் இ-பஸ் விரைவில் அறிமுகம்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் இ-பஸ் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் மதுரை மாவட்டத்திற்கு 100 பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளியை தமிழக அரசு போக்குவரத்து கழகம் தற்போது வெளியிட்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

News December 11, 2024

மதுரை விசிக விவகாரம்- அரசு அலுவலகங்களுக்கு பூட்டு

image

மதுரையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பணியிட நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலகங்களும் பூட்டு போட்டு வருவாய்த்துறை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

News December 11, 2024

மதுரை: பல்கலையில் தீ குளிக்க முயற்சி

image

மதுரை காமராஜ் பல்கலை எலக்ட்ரீசியன் சிவா 2022 இல் இறந்தார். அவருக்கான பணப்பலன்களை குடும்பத்திற்கு பல்கலை வழங்குவதில் தாமதம் நீடிக்கிறது. இதனால் அதிருப்தியடைந்த மாமனார் நாகராஜன், மாமியார் சுசீலா நேற்று பல்கலையில் காமராஜ் சிலை அருகே தீக்குளிக்க முயன்றனர். ஊழியர்கள் தடுத்தனர். அவர்களிடம் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் பேசி விரைவில் பணப்பலன்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

News December 11, 2024

மதுரை உட்பட 4 மண்டலங்களில் தவெக மாநாடு

image

சட்டசபை தேர்தலை கணக்கிட்டு தவெக-வை துவக்கிய நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினர்.சில மாவட்ட செயலாளர்கள் எங்கள் மாவட்டத்தில் மாநாடு நடத்துவீர்கள் என எதிர்பார்த்திருந்தோம் என்றனர். அதற்கு விஜய் நிச்சயம் மண்டலம் வாரியாக மாநாடு நடத்தப்படும் என்றார். அரசியல் திருப்புமுனைகளுக்கு பெயர் பெற்ற மதுரையில் முதல் மாநாட்டை நடத்த வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் கருதுகின்றனர்.

News December 10, 2024

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்ட இரவு ரோந்து பணி (டிச.10) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடு. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News December 10, 2024

டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய திருமாவளவன் மனு

image

இந்திய ஒன்றிய அரசின் சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்ரெட்டியை சந்தித்து, மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் “டங்க்ஸ்டன் சுரங்கம்” அமைப்பதைக் கைவிடக் கோரி இன்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மனு அளித்துள்ளார். அதனைப் பெற்றுக்கொண்ட அவர், “தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்திய ஒன்றிய அரசு எதுவும் செய்யப்போவதில்லை” என உறுதியளித்தார்.

News December 10, 2024

மதுரை தேஜஸ் விரைவு ரயில் நேரம் மாற்றம்: ரயில்வே அறிவிப்பு

image

சென்னை மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் ரயில் டிசம்பர் 28, 31 ஆகிய தேதிகளில் திருச்சி மதுரை இடையே பராமரிப்பு காரணமாக பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல், மதுரையிலிருந்து சென்னைக்கு டிசம்பர் 28, 31-ம் தேதி மதுரையிலிருந்து 15:00 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக திருச்சி ரயில் நிலையத்திலிருந்து மாலை 17:05க்கும் புறப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது.

News December 10, 2024

கொலை வழக்கில் முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

image

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அழகாபுரியைச் சேர்ந்தவர் சோலைமலைக் கோன் (58). இவர் 2019ல் அதே ஊரைச் சேர்ந்த பாஸ்கரன் (50) என்பவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப்ஜாய் சோலைமலைக்கோனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News December 10, 2024

சபரிமலைக்கு சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு 

image

கொல்லம் செகந்திராபாத் சிறப்பு ரயில் 2 வாரங்களுக்கு மட்டும், தென்காசி வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செகந்திராபாத்திலிருந்து கொல்லத்திற்கு வியாழக்கிழமையும், கொல்லத்திலிருந்து செகந்திராபாத்க்கு சனிக்கிழமையும் இவை இயக்கப்படும். நாளை காலை 8 மணிக்கு முன் பதிவு தொடங்கும். இதில் ஸ்லீப்பர், 3ம் வகுப்பு ஏசி 2ம் வகுப்பு ஏசி உள்ளது, என தெற்கு ரயில்வே இன்று(டிச.10) அறிவித்துள்ளது.

error: Content is protected !!