Madurai

News December 12, 2024

மதுரை: பகல் நேர ரோந்து காவலர்கள் விபரம் 

image

மதுரை மாவட்டத்தில் இன்று (டிச.12) பகல் நேர ரோந்து பணிக்கு காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. பேரையூர், ஊமச்சிகுளம், திருமங்கலம், மேலூர், சமயநல்லூர், உசிலம்பட்டி போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை பகல் ரோந்து காவல்துறை அதிகாரிகளின் விவரம் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

News December 12, 2024

மதுரைக்கு நாளை கனமழை – வானிலை மையம்

image

தென் தமிழக மாவட்டங்களில் நாளை (டிச.13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்து வரும் அவர்; சிவகங்கை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும் என்றும், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

News December 12, 2024

ரயில்வே தொழிற்சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை துவக்கம்

image

மதுரை தெற்கு ரயில்வே கோட்டா மேலாளர் அலுவலகத்தில் அனைத்து ரயில்வே தொழிற்சங்க தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கையானது காலை முதல் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி எஸ்ஆர்எம் யூ தொழிற்சங்கம் முன்னிலையில் உள்ளது டி ஆர் இ யூ மற்றும் எஸ் ஆர் இ எஸ் என இரு சங்கங்களும் இரண்டு, மூன்று இடங்களில் இருப்பதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது

News December 12, 2024

குன்றத்தில் இன்று முருகனுக்கு பட்டாபிஷேகம்

image

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டாபிஷேகம், தீபத்திருவிழா நிகழ்வு இன்று(டிச.12) மாலை 7 மணியளவில் துவங்கி நடைபெற உள்ளது. இதற்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போலீசார் பாதுகாப்பு தீவிரம் காட்டுகின்றனர். 

News December 12, 2024

மதுரையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று(டிச.,12) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரி, மதுரை, சிவகங்கை மாவட்டங்களிலும் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பிட மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் அன்றாட பணிகளை தகுந்தாற் போல் முன்னேற்பாடு செய்து கொள்ளவும்
*SHARE* பகிரவும்*

News December 12, 2024

ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு: மதுரை கோட்ட ரயில்வே 

image

மதுரை கோட்ட ரயில்வே அறிவிப்பு , மதுரை ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் வரை செல்லும் மதுரை-திருவனந்தபுரம் அமிர்தா விரைவு ரயிலில் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டி இணைக்கப்படும். அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை இயக்கப்படும் 16343 ரயிலிலும் கூடுதலாக ஒரு படுக்கை வசதியுடன் கூடிய ரயில் பெட்டி இணைக்கப்படும் என மதுரை கோட்ட ரயில்வே சார்பாக அறிவிப்பு.

News December 12, 2024

மதுரை மாநகரில் இரவு முழுவதும் கனமழை

image

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக டெல்டா, தென் மாவட்டங்களில் கன முதல் மிகக் கன மழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி மதுரையில் நேற்று அவ்வபோது சாரல் மழை விட்டு பெய்தது. இன்று(டிச.12) அதிகாலை 4 மணி முதல் செல்லூர், கோரிப்பாளையம், ஆரப்பாளையம், பெரியார், தெற்கு வாசல் உள்ளிட்ட மாநகர் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் இரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

News December 11, 2024

மதுரை மாநகர இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம் 

image

மதுரை மாநகர இரவு ரோந்து பணி (டிச.11) காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் வெளியீடு. தெற்கு வாசல், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல், செல்லூர், அண்ணா நகர் போன்ற மதுரை மாநகர பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி காவலர்களின் பட்டியல் மதுரை மாநகர காவல் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டது.

News December 11, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

மதுரை மாவட்டத்தில் இன்று(11.12.2024) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 11, 2024

மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதிய அறிமுகம் 

image

தெற்கு ரயில்வேயில் முதன்முறையாக மதுரை கோட்டத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கம்பளி போர்வைகள் தனித்தனி துணி உறைகளோடு செவ்வாய்க்கிழமை (டிச.10) முதல் சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த புதிய வசதி மதுரை – சென்னை – மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில்களில் தொடர்ந்து செயல்படுத்தப்பட இருக்கிறது.

error: Content is protected !!