India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து, ஜோலார்பேட்டை, ஈரோடு, கோவை, திண்டுக்கல், மதுரை வழியாக கொல்லத்துக்கு வாராந்திர சிறப்பு ரெயிலாக இயக்கப்பட உள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து இந்த ரயில் நாளை(நவ.20) முதல் வரும் ஜன. மாதம் 15ந் தேதி வரை மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் வரும் 21ம் முதல் ஜன.21வரை இயக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குள்பட்ட துணைக் கோயில்களான, கீழமாசி வீதியில் உள்ள தேரடி கருப்பணசாமி கோயில், சிம்மக்கல் திருமலைராயர் படித்துறையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், எழுகடல் தெருவில் உள்ள எழுகடல் விநாயகர் கோயில், சுடுதண்ணீர் வாய்க்கால் ராமானூஜம் நகரில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயில், எழுகடல் தெரு காஞ்சன மாலையம்மன் கோயில் ஆகிய கோயில்களில் 21ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது.
மதுரை மாவட்டத்தில் புறநகர் பகுதியில் உள்ள காவல் சரகங்களான உசிலம்பட்டி, திருமங்கலம், சோழவந்தான், ஊமச்சிகுளம், மேலூர் பகுதிகளில் இரவு 10 மணி முதல் காலை 06 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மதுரை மாவட்ட காவல்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த தொடர்பு எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
பாலமேடு ராமையன்பட்டி கிராம ஊராட்சியில் உள்ள குளத்தை தூர்வாரி தடுப்புச்சுவர் அமைக்க ரூ.9.98 லட்சம் ஆனதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தை முழுமையாக தூர்வாரப்படவில்லை என்றும், குளத்தைச் சுற்றிலும் ஒரு பகுதியில் மட்டுமே தடுப்புகள் அமைக்கப்பட்டு மீதி உள்ள பகுதியில் தடுப்புகள் அமைக்கப்படாமலேயே இருப்பதாக கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளதால் ஊழல் நடந்திருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்.
மதுரை மாநகர் பகுதியில் இன்று(நவ.18) பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை ரோந்து பணியில் உள்ள காவலர்களின் விவரங்களை மாநகராட்சி காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்கள் புகார்கள் குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க இதில் குறிப்பிட்டுள்ள எண்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் கடந்த வாரம் 5ம் வகுப்பு பள்ளி மாணவன் அகிலன் முதல் தளத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறும் நிலையில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் எதிரொலியாக தற்போது பள்ளி மூடப்பட்டு தற்போது அருகில் உள்ள திருமண மண்டபத்தில் செயல்படுகிறது
மதுரை மாவட்டத்தில் வைரல் காய்ச்சல் அறிகுறியுடன் கடந்த மாதம் தினமும் 20 நபர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் அந்த எண்ணிக்கை அதிகரித்து தினமும் சராசரியாக 40 நபர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் இதுவரை 101 நபர்கள் உள் நோயாளிகளாக காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். யாருக்கும் டெங்கு பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோரிப்பாளையம் பகுதியில் அமையும் மேம்பால பணியில் பாலம் ஸ்டேஷன் சாலையில் ஒரு பிரிவு கீழிறங்கும் வகையில் பாலம் அமைகிறது. அதன் கீழ் பந்தல்குடி கால்வாய் வைகையை நோக்கி வரும்போது சாலையை கடக்கும் இடத்திலும் பணிகள் நடக்க உள்ளன. சிம்மக்கல்லில் இருந்து கோரிப்பாளையம் செல்லும் இரு சக்கர வாகனங்கள் திருமலைராயர் படித்துறை சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு வைகையின் வடகரையில் செல்லும் வகையில் மாற்றப்பட உள்ளது.
மதுரை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு 25.11.2024 முதல் 6.12.2024 வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர் நேர்முகத்தேர்விற்கான அனுமதிச்சீட்டினை, இன்று (நவ.18.)முதல் மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் இணையதளம் (www.drbmadurai.net) வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
மதுரையில் சர்வதேச அளவில் முதலீடு செய்வதாக 96 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த வாரம் ஏற்கனவே 6 பேரை மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மதுரை மேலூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான், தெற்கு வாசலைச் சேர்ந்த சுல்தான் அப்துல் காதர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.