Krishnagiri

News April 6, 2024

ஓசூர்: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

image

ஓசூர் அருகே சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில்
வாகனத்தில் 69 பெட்டிகளில் தங்க நகைகள் இருந்த நிலையில், அவற்றில் 45 பெட்டிகளுக்கு மட்டுமே உரிய ஆவணங்கள் இருந்தன. நகையை கொண்டு வந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அனைத்து நகைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News April 6, 2024

கிருஷ்ணகிரி: ஏடிஎம் உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

image

குருபரப்பள்ளி கிராமத்தில் எஸ்பிஐ வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் செயல்பட்டுவருகிறது. இந்த மையத்தில் நேற்று ரூ.10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை நிரப்பியுள்ளார்கள். நேற்று இரவு ஏடிஎம் வெல்டிங் இயந்திரத்தை மூலம் உடைத்து மர்ம நபா்கள் ரூ.10 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பொது மக்களின் தகவலின்பேரில் குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2024

கிருஷ்ணகிரி: பதற்றமான சாவடி எண்ணிக்கை வெளியீடு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 208 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், ஒரு வாக்குச்சாவடி மிகவும் பதற்றமானது என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

News April 5, 2024

கர்நாடக மது பாட்டில்கள் கடத்தி விற்றவர் கைது

image

ராயக்கோட்டை போலீசார் கெலமங்கலம் சாலையில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, வன்னியபுரம் தனியார் தொழிற்சாலை முன்பு சந்தேகப்படும்படி இருந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் நல்லராலப்பள்ளியை சேர்ந்த ஜெயப்பா மகன் சங்கர்(38) என்பதும், அவர் கர்நாடகாவிலிருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து ஒசூர் சிறையில் அடைத்தனர்.

News April 5, 2024

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

image

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு பொதுமக்கள் இன்று காலை தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு அவர் யார்? கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 5, 2024

அனல்பறக்கும் பிரச்சாரம் இல்லை: மக்கள் வருத்தம்

image

தேர்தல் கமிஷன் கட்டுப்பாடுகளால், கடந்த தேர்தல்களில் சுவர் விளம்பரம், தெருக்களில் தோரணங்கள், ஆட்டோக்களில் ஸ்பீக்கர் வைத்து பிரச்சாரம், வேட்பாளர்களை ஆதரித்து விடிய விடிய தலைவர்கள் பிரச்சாரம் போன்றவைகளால் டீ கடை முதல் ஓட்டல்கள் வரை நல்ல வியாபாரம் போன்றவை இப்போது இல்லாததால் அனைத்து தரப்பினரும் பாதித்துள்ளனர். தேர்தல் திருவிழா இல்லாமையால் மக்கள் உற்சாகமின்றி உள்ளனர்.

News April 5, 2024

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 5, 2024

வாகன சோதனை: பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

image

மக்களவைத் தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்தூரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (ஏப்ரல் 4) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார் உடனிருந்தனர்.

News April 4, 2024

வாகன சோதனையை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, 54- ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்துாரில் தீவிர வாகன சோதனையை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு இ.ஆ.ப., இன்று 04.04.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரமேஷ்குமார உடனிருந்தனர்.

News April 4, 2024

அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காமாட்சிப்பட்டியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் மாவட்ட செயலாளர் மற்றும் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வன், மாவட்ட ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.