India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரியில் 30ஆவது மாங்கனி கண்காட்சி இரண்டு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவை திரும்பப் பெறப்பட்டது. எனவே திட்டமிட்டப்படி நாளை மாங்கனி கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கண்காட்சிக்கான வேலைகள் முழுமை பெறாத நிலை இருப்பதால் மாலை 3 மணிக்கு கண்காட்சி தொடங்கப்படும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் 30 ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நாளை 13.09.2024 முதல் தொடங்கி 28 நாட்களுக்கு நடைபெற இருந்த நிலையில் இன்று பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் அரங்கமைப்பு பணிகளை பார்வையிட்டனர். இந்நிலையில் பணிகள் இன்னும் முழுமை பெறாத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மாங்கனி கண்காட்சி ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் இந்தியன் வங்கி நடத்தும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலகத்தில் மத்திய அரசின் சான்றிதழுடன் கூடிய ஆண் பெண் இருபாலருக்குமான 13 நாட்களுக்கு CCTV கேமரா பொருத்துதல் பயிற்சியும், பெண்களுக்கு மட்டுமான 30 நாட்களுக்கு தையல் பயிற்சியும் துவங்கியுள்ளது. பயிற்சியில் இணைந்து கொள்ள வரும் செப்.14 ஆம் தேதி கடைசி நாள் என பயிற்சி நிறுவன இயக்குநர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் கட்டுமான கருவி உற்பத்தி நிலையங்களை ரூ.500 கோடியில் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஷேர் பண்ணுங்க.
கிருஷ்ணகிரியில் பிளஸ்-2 முடித்து இன்னும் உயர்கல்விக்கு செல்லாத 1,200 மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்காக மேலும் 2 இடங்களில் கூடுதலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஓசூர், ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் மாணவர்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேன்கனிக்கோட்டை வட்டம் வானமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மது என்பவரின் மூன்று வயது மகள் சசிகலா, அங்கன்வாடி மையத்தில் பயின்ற நிலையில் குழந்தையின் மீது கார் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. இது தொடர்பாக அங்கன்வாடி மைய கண்காணிப்பாளர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஆகிய இருவரும் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக பணியிடை நீக்கம் செய்து நேற்று ஆட்சியர் சரயு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, 2024-2025 -ம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (10.09.2024) துவக்கி வைத்தார். உடன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.ராஜகோபால் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
கிருஷ்ணகிரி பள்ளி விவகாரத்தில் போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமனுக்கு உதவியதாக ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளிகளில் போலியாக என்சிசி முகாம் நடத்தி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன் உட்பட 17 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியான சிவராமன் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையின் கீழ், கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இருபாலருக்குமான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில் பாரம்பரிய கலைகளான குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. சேர்ந்து பயன் பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து பட்டப்படிப்பு சேராத மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்வதற்கான “உயர்வுக்கு படி” விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு முதல் கட்டமாக இன்று குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.உடன், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.