India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போச்சம்பள்ளி அருகே தட்டக்கல் பகுதியில் நேற்று தேவாங்கு ஒன்று அடிப்பட்ட நிலையில் இருந்தது. இதை பார்த்த சிவகுரு என்பவர் அதை மீட்டு, அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வனத்துறையினர் நேரில் வந்து அடிப்பட்ட நிலையில் இருந்த தேவாங்கை மீட்டு சென்றனர்.
ஒசூர் அடுத்த தளி ஜெயந்தி காலனியில் ஆண் சடலம் கொலை செய்து கிடப்பதாக தளி போலீசாருக்கு நேற்று இரவு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது கொலை செய்யப்பட்டவர் குனிக்கல் கிராமத்தை சேர்ந்த சதீஷ்(34) என்பது தெரியவந்தது. சதீஷ் ஏற்கனவே ஒரு கொலை, 3 கொலை முயற்சி என 6 வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் முன்விரோத காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அதிகரித்து வரும் கடும் கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொண்ட தண்ணீர் பந்தல் திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் திறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக் ரெட்டி வாசுதேவன், ஆகியோர் தலைமையில், முன்னிலை ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி
அவர்கள் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்
போச்சம்பள்ளி அடுத்த மேட்டு சூளக்கரையை சேர்ந்தவர் மேகநாதன் (28)கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி 1 பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று (ஏப்-25) இவரும் தனது நண்பரான அஜித் என்பவரும் ஒரே டூவீலரில் போச்சம்பள்ளி நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது எதிரே வந்த டிரக்டர் மோதியதில் மேகநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைவர் திருமதி கே.எம்.சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு. பூதேவி மற்றும் வட்டார சுகாதார அலுவலர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி அடுத்த கும்மனூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன்(63), டிரைவர். இவரது மனைவி பூங்கொடி(50), மகன் முரளி(32). மாதையனிடம் சொத்தை எழுதி தரும்படி மனைவியும், மகனும் அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி இரவும் கேட்டு தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமயைில் சிகிச்சை பெற்றுவருகிறார். இது குறித்த புகாரின் பேரில் மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ளது காட்டு வீர ஆஞ்சிநேயர் கோவில். மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில் கர்ப்ப கிரகத்தில் 2500 ஆண்டுகள் பழமையான ஆஞ்சிநேயர் சிலை உள்ளது. பக்தர்களுக்கு சிவப்பு நிற துணிப்பை இக்கோவிலில் தரப்படுகிறது. பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் கோவிலில் ஒப்படைக்க வேண்டும்.பின் 3 மாதங்களுக்கு பின் பையை அப்புறப்படுத்துவார்கள்.இதற்குள் அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுவதாக நம்பப்படுகிறது
ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பகுதியில் நேற்று மதியம் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் சந்திராபுரம் பகுதியை சார்ந்த ராஜா என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிக வெப்ப அலை வீசகூடும் என்பதால் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே, அரியலூர் மாவட்ட மக்கள் நண்பகல் 12 மணி முதல் பிறபகல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்கமாறு அறுவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.