Krishnagiri

News September 30, 2024

பயிர்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஆலள்ளி வனப்பகுதியில் சுற்றி திரிந்த 2 காட்டு யானைகள் அப்பகுதியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த விளை பயிர்களை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்து குடிநீர் பைப்புகளையும் சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமான பயிர்களுக்கு. இழப்பீடுகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

News September 30, 2024

குங்ஃபூ போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

image

உத்தரபிரதேசம் மாநிலத்தில் கடந்த 19, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் 15 வது ஆண்டு தேசிய அளவிலான குங்ஃபூ போட்டிகள் நடைபெற்றது. இதில் ஓசூரை சேர்ந்த 18 மாணவர்கள் பங்கேற்று 9 தங்கம், 10 வெள்ளி மற்றும் 14 வெண்கல பதக்கங்களை வென்றனர். அவர்களை ஓசூர் மாநகராட்சி துணை மேயர் ஆனந்தய்யா மாமன்ற உறுப்பினர் மஞ்சம்மாள் மற்றும் கிரிபாபு, கார்த்தி, எலோரா மணி ஆகியோர் நேற்று பாராட்டி வாழ்த்தினர்.

News September 30, 2024

ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், ஊடேதுர்க்கம் ஊராட்சி திம்ஜேபள்ளியில் இயங்கி வரும் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தையட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையினை கிருஷ்ணகிரி மாவட்ட தேசிய சுகாதார இயக்க கண்காணிப்பு பணி இயக்குநர் ஷில்பா பிரபாகர் ஆய்வு மேற்கொண்டு தீயணைப்பு பணிகள் குறித்து கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.

News September 29, 2024

திமுக வாரிசு அரசியல் கட்சி: முன்னாள் அமைச்சர் சாடல்

image

ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக கழகச் செயல் வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு பகுதி செயலாளர் ராஜு முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண கலந்து கொண்டு பேசினார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டது, திமுக ஒரு வாரிசு அரசியல் கட்சி என காட்டுகிறது என்று குற்றம் சாட்டினர்.

News September 29, 2024

கிருஷ்ணகிரியில் மதுக்கடைகள் மூடல்

image

அக். 2-ம் தேதி அன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள், மதுக் கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு, தனியார் உணவகங்கள் அனைத்தும் அடைக்கப்படும். இந்த உத்தரவை மீறி விற்பனையாளர்கள் மதுக்கடைகளை திறந்தாலும், விற்பனை செய்தாலும், கொண்டு சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.

News September 29, 2024

மக்களவை நிதிக் குழு உறுப்பினராக கிருஷ்ணகிரி எம்.பி. நியமனம்

image

மக்களவை நிதிக் குழு உறுப்பினராக கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு நிதிக் குழுவை நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. அதில் மக்களவையில் இருந்து 21 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் இருந்து 10 எம்.பி.க்களும் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவில் கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் கே.கோபிநாத் இடம்பெற்றுள்ளாா்.

News September 28, 2024

கிருஷ்ணகிரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் இன்று இரவு 7:00 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் சென்று வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது என அறிவித்தப்பட்டுள்ளது.

News September 28, 2024

டாடா நிறுவனத்தில் தீ விபத்து -ஆட்சியர் ஆறுதல்

image

தேன்கனிக்கோட்டை வட்டம், இராயக்கோட்டை உள்வட்டம், 68- ஊடேதுர்க்கம், 69- திம்ஜேபள்ளி தரப்பில் இயங்கி வரும் டாடா தனியார் நிறுவனத்தில் இன்று காலை 6 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் டாடா நிறுவனத்தில் பணிபுரியும் நான்கு தொழிலாளர்கள் மூச்சுத் திணறல் காரணமாக ஓசூர் காவேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எம். சரயு நேரடியாக சென்று பார்வையிட்டார்.

News September 28, 2024

கிருஷ்ணகிரிக்கு மழை வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மழை இல்லாமல் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளித்து நிலக்கடலை அறுவடை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையத்தின் அறிவிப்பு மாவட்ட விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 28, 2024

ஓசூர் அருகே தொழிற்சாலையில் தீ விபத்து

image

ஓசூர் அருகே அமைந்துள்ள தனியார் கம்பெனி கெமிக்கல் ஸ்டோரேஜ் மையம் தீப்பிடித்து கடந்த ஒரு மணி நேரமாக புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த தொழிற்சாலையில் ஆப்பிள் செல்போன் உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் கெலமங்கலம் அருகே கம்பெனியைச் சேர்ந்த பேருந்து விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தது குறிப்பிடப்பட்டது.

error: Content is protected !!