Krishnagiri

News May 17, 2024

கிருஷ்ணகிரி: கொட்டித் தீர்த்த கனமழை!

image

வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் நேற்று மாலை திடீரென கருமேகங்கள் திரண்டன. மாலை 4 மணிக்கு தொடங்கி 1 மணி நேரத்திற்கு மேலாக வேப்பனப்பள்ளி, குருபரப்பள்ளி, நாச்சிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News May 17, 2024

கிருஷ்ணகிரி: காலிக் குடங்களுடன் பெண்கள் போராட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அண்ணாநகர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உட்பட்டனர். இதனால் ஓசூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகர ஆணையாளர் ஒரு வாரத்தில் தண்ணீர் ஏற்பாடு தருவார் என்று உறுதி கூறியுள்ளார். அதன்பிறகு பொதுமக்கள் சென்றனர்.

News May 16, 2024

கிருஷ்ணகிரி பொதுமக்களுக்கு இலவச எண் அறிவிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த தேசிய சட்டப் பணிகள் ஆணை குழு சார்பாக சட்டம் சார்ந்த பொதுமக்கள் தங்களது சந்தேகங்களுக்கு 15100 என்ற எண்ணை 24 மணி நேரமும் இலவசமாக தொடர்பு கொண்டு சட்ட விழிப்புணர்வை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது சட்டம் சார்ந்த சந்தேகங்களுக்கு தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளனர்.

News May 16, 2024

பள்ளி கல்வித்துறை ஆலோசனைக் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் இன்று  நடைபெற்றது. உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிமேகலை, கோவிந்தன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி முதல்வர் திருமதி. ஹேமலதா, மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளனர்.

News May 16, 2024

ஒசூரில் தார் சாலை அமைக்கும் பணி ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி 40ஆவது வார்டிற்குட்பட்ட பெரியார் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக தலைவரும், 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் பார்வதி அவர்களின் கணவருமான M.நாகராஜ் அவர்கள் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News May 16, 2024

கால்நடை வளர்ப்போருக்கு கலெக்டர் அறிவுரை

image

வெப்ப அழற்சியினால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக வழங்கப்பட்டுள்ள மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் பசுக்களுக்கு அரிசி கஞ்சி வைப்பதை தவிர்க்க வேண்டும், போதுமான அளவு சுத்தமான குடிநீர் அவ்வப்போது வைக்க வேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் பசுந்தீவனம் வழங்கலாம் என்றார்.

News May 16, 2024

கிருஷ்ணகிரி அருகே துர்நாற்றம்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி தர்மராஜா கோவில் தெரு காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பைகள் பெரியகுளம் ஆஞ்சநேயர் கோவில் எதிரில் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு இருக்கும் மனநல பாதிக்கப்பட்ட ஒருவர் குப்பைகளை பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துக் கொண்டு குப்பைக்கு தீ வைத்து செல்கிறார். இதனால் அப்பகுதியில் கரும் புகையுடன் துர்நாற்றம் வீசுகிறது. சீர் செய்யுமா பேரூராட்சி நிர்வாகம்?

News May 16, 2024

கிருஷ்ணகிரி: துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி

image

பா்கூர்: முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரெளபதி அம்மன் கோவிலில் மகாபாரத திருவிழா நடைபெற்றது. 13 நாள்கள் தெருக்கூத்து நாடகமும் நடந்தது. இதில் கடந்த 18 நாள்களாக நடந்து வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கோயில் அருகே 40 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம் வடித்து பீமன், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வை, கலைஞா்கள் நடித்துக்காட்டினா்.

News May 16, 2024

கிருஷ்ணகிரி: ஊரக உள்ளாட்சித் தேர்தல்

image

கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 4ம் தேதி நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு ஓரிரு மாதங்களில் அனைத்து மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது.

News May 15, 2024

கிருஷ்ணகிரி அருகே போராட்டம் வாபஸ்

image

தளி சட்டமன்றத் தொகுதியில் யானைகள் தாக்கி தொடர் மனித உயிர் பலியாவதை கண்டித்து வனத்துறை அலுவலகம் முன்பு சிபிஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் DFO, DSP தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒற்றை யானைகளை காட்டுக்குள் விரட்டப்படும் எனவும் யானைகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்துவதாக உறுதியளித்ததால் போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.