Krishnagiri

News May 21, 2024

வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறை

image

ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்கு எண்ணிக்கையை நாளன்று வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 21, 2024

கிருஷ்ணகிரியில் வெளுக்கப்போகும் கனமழை!

image

வங்கக் கடலில் இன்றும், நாளையும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது.

News May 21, 2024

கிருஷ்ணகிரி: டிஎஸ்பி குடியிருப்பு பகுதியில் சாய்ந்த மரம்

image

கிருஷ்ணகிரி, ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையில் ஏற்கனவே காய்ந்த நிலையில் இருந்த பழமையான மரம் இன்று மே 21 ஆம் தேதி அதிகாலை அருகில் இருந்த மாடி வீட்டின் மேல் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித பதிப்பும் ஏற்படவில்லை சாய்ந்த மரத்தை அகற்றும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.

News May 21, 2024

கிருஷ்ணகிரி: டன் கணக்கில் செத்து மிதந்த மீன்கள்

image

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையில் கொத்துக் கொத்தாக டன் கணக்கில் மீன்கள் நேற்று செத்து மிதந்தன. தென்பெண்ணை ஆற்றில் மழைத் தண்ணீரில் ரசாயன கழிவுகள் கலந்து வருவதால்தான் மீன்கள் செத்து மிதக்கின்றன என்று மீனவர்கள் தெரிவித்தனர். மேலும் மீன்கள் செத்து மிதப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தும் இறந்த மீன்களை மீன்வளத்துறையினர் அகற்றவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

News May 21, 2024

கிருஷ்ணகிரியில் திறன் வளர்க்கும் போட்டிகள்

image

கிருஷ்ணகிரி புத்தக பேரவையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் தனி திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மே 25ம் தேதி காலை 9 மணி முதல் போட்டிகள் நடைபெறும். இதில் பேச்சு, கவிதை, கட்டுரை, வினாடி வினா, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெற உள்ளன. போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 20, 2024

கிருஷ்ணகிரி: திருக்கல்யாண வைபவம்

image

கிருஷ்ணகிரி பழைய பேட்டை ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக இன்று (மே-20) ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு திருக்கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த கோவிலில் மே 28 வரை பிரம்மோற்சவம் நடைபெறும்.

News May 20, 2024

கிருஷ்ணகிரி அருகே திருக்கல்யாண விழா

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள கோபசந்திரம் கிராமத்தில், தட்சிண திருப்பதி வெங்கடரமண சுவாமி கோயிலில் நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதை முன்னிட்டு மூலவருக்கு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஓசூர், அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டன.

News May 20, 2024

ஓசூர்: பாஜகவில் இணைந்த இளைஞர்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரிலுள்ள 40வது வார்டு பாஜக மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காமன்தொட்டி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 50 நபர்கள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நாராயணஸ்வாமி தலைமையில் மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தனர். உடன் மாவட்ட துணை தலைவர் முருகன், அமைப்புசாரா பிரிவு மாநில துணை தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News May 20, 2024

கிருஷ்ணகிரி: கள்ளத்தனமாக மது விற்ற 5 பேர் மீது வழக்கு

image

ஊத்தங்கரை உட்கோட்ட காவல் எல்லைக்குட்பட்ட சிங்காரப்பேட்டை, கல்லாவி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக அரசு மதுபானங்களை அதிக விலைக்கு விற்ற கல்லாவி புதூர் புங்கனை சென்னகேசவன், சிங்காரப்பேட்டை குப்பநத்தம் ஆறுமுகம், மத்தூர் அடுத்த பெருமனூர் பூபாலன், கிருஷ்ணமூர்த்தி, சாமல்பட்டி குன்னத்தூர் மணிமேகலை உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

கிருஷ்ணகிரி: மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை

image

ஊத்தங்கரை அடுத்த மூங்கிலேறியை சேர்ந்தவர் காளியப்பன். அவரது மகள் திருமலா கீழ்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி இருந்த நிலையில் மதிப்பெண் குறைந்ததால் கடந்த 12ஆம் தேதி அவரது வீட்டில் தூக்கிட்டு கொண்டார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.