Krishnagiri

News May 24, 2024

கிருஷ்ணகிரி ராஜாஜி நினைவகம் பற்றிய குறிப்பு

image

கிருஷ்ணகிரியில் பிறந்த சுதந்திர போராட்ட வீரரான இராஜகோபாலாச்சாரியின் நினைவாக அவரின் இல்லத்தை தமிழக அரசு நினைவகமாக அறிவித்துள்ளது. இதில் தன் அரை நூற்றாண்டு காலத்தை பொது வாழ்வில் ஈடுபடுத்திக்கொண்ட, அவரின் வரலாறு பற்றிய குறிப்புகளும், அரிய புகைப்படங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகம் கிருஷ்ணகிரி ஒசூர் நெடுங்சாலையில் அமைந்துள்ளது.

News May 24, 2024

கிருஷ்ணகிரி: வார விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

image

தமிழகத்தில் முகூர்த்தம், வார விடுமுறை நாள்களை முன்னிட்டு 1,460 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிவிரைவு போக்குவரத்துக் கழகம் அளித்துள்ளது. அதன்படி இன்று (மே 24) மற்றும் நாளை (மே 25) ஆகிய தேதிகளில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு 130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

News May 24, 2024

கிருஷ்ணகிரி கலெக்டர் நேரில் ஆய்வு

image

ஊத்தங்கரை விளையாட்டு அரங்கில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் இறகு பந்து உள் விளையாட்டு அரங்க கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News May 23, 2024

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சந்திரப்பட்டி ஊராட்சி, வேடப்பட்டியில் இருளர் இன மக்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.48 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 11 வீடுகள் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கே. எம். சரயு இ.ஆ.ப. இன்று 23.05.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகள் உடனிருந்தனர்.

News May 23, 2024

வரலாற்றுத்துறை மாணவியர்களுக்கு பயிற்சி

image

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் சேலம் சாரதா கல்லுாரி, தர்மபுரி விஜய் வித்யாலயா கல்லுாரி, ஊத்தங்கரை அதியமான் கல்லுாரிகளை சேர்ந்த வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை மாணவியர் 40 பேருக்கு 15 நாட்கள் தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் பயிற்சி நேற்று துவங்கியது. மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுத்தலைவர் நாராயணமூர்த்தி இப்பயிற்சியை துவக்கி வைத்தார்.

News May 23, 2024

திரும்பி பார்க்க வைக்கப்போகும் ஓசூர்: சூப்பர் அறிவிப்பு

image

ஓசூர்: டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்பிளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவுசெய்துள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.

News May 22, 2024

கொள்ளையடித்த நகைகளை கோவில் முன்பு வைத்து சென்ற திருடர்கள்

image

சூளகிரி அருகே அத்தி முகாம் பகுதியில் உள்ள சிவன் கோவிலில் கடந்த 16ம் தேதி இரவு வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் கொள்ளையர்கள் தாங்கள் திருடிய பொருட்களை கோவில் முன்பு இன்று அதிகாலை வைத்து விட்டு சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

News May 22, 2024

கிருஷ்ணகிரி: உயிரை பறித்த சூதாட்டம்..! 

image

ஓசூர் மாநகராட்சி தோட்டகிரி சாலையில் மணிவாசகன் (36) என்பவர் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். மனைவி, பிள்ளைகள் ஊருக்கு சென்றிருந்த நிலையில் நேற்றிரவு மணிவாசகம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஓசூர் அட்கோ போலீசார் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் பிரச்சனையால் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.

News May 22, 2024

ஓசூர் திமுக மாநகர செயலாளர் அழைப்பு

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் மே 25ஆம் தேதி ஓசூர் தளி சாலையில் உள்ள சென்னிஸ் மஹாலில் நடைபெற உள்ளது. அதில் சிறப்பு அழைப்பாளராக உணவுப் பொருள் மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார். எனவே கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த திமுகவின் ஒன்றியஸ நகரஸ மாவட்டஸ மாநில அணி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாநகர செயலாளர் சத்யா அழைப்பு.

News May 22, 2024

கிருஷ்ணகிரி: முக்கிய பிரமுகரை நேரில் சந்தித்த எம்எல்ஏ

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அவைத்தலைவர் பெருமாள் உடல்நலக் குறைவால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில், நேற்று (மே 21) பெருமாளை, கிருஷ்ணகிரியில் உள்ள அவரது இல்லத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி நேரில் சந்தித்து சிகிச்சை குறித்தும், உடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார். இந்நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் உடனிருந்தனர்.