India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே 5 காட்டு யானைகள் ஆலஹள்ளி காட்டிலிருந்து கர்நாடகா வனப்பகுதியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. தற்போது கெண்டகானப்பள்ளி கிராமம் அருகே யானைகள் முகாமிட்டுள்ளன. வனத்துறையினர், விவசாயிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை செல்லுபவர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை பொது விநியோக திட்டம் சம்மந்தமாக வட்ட வழங்கல் அலுவலரால் நடத்தப்படும் பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முப்படைகளிலும் பணி புரிந்து ஓய்வுபெற்ற 45 வயதிற்குட்பட்ட முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு ஊக்குவிக்கும் பொருட்டு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல் குறித்து மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழக உதவி இயக்குநருடன் கருத்தரங்கு கூட்டம் முன்னாள் படைவீரர்கள் நல அலுவலகத்தில் இன்று 11 மணிக்கு நடைபெற உள்ளது. கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று கன மழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் வெளியே செல்லும் பொதுமக்கள் தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த சாலமரத்துபட்டி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் நடந்து செல்லும் போது நேற்று மாலை இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கல்லாவி காவல்துறையினர் கைது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறி சாலையில் பிணத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரியில் பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை பெற https://scholarships.gov என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார். இத்துறையின் இணையதளத்தை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி அணைக்கு தொடர்மழை காரணமாக நீா்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 1,714கன அடியாக இருந்த நீா்வரத்து படிப்படியாக உயா்ந்து நண்பகல் 12மணியளவில் 3,428 கனஅடியாக அதிகரித்ததால் அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 50.40 இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பூங்காவுக்கு வருவதற்கு சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வரும் சனிக்கிழமை கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நிறுவனங்கள் ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதனை வேலை தேடுவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் சரயு கேட்டுக் கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்றும் நாளையும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள கிராமங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் நடைபெற இருந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்படுகிறது என்றும் இந்த முகாம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சரயு இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.