India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பர்கூர் பகுதிகளில் உள்ள சிகரலபள்ளி, கந்திலி, மத்தூர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இன்று பீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பர்கூர் பகுதியில் நடந்த தொட்டிலம்மன் பண்டிகை காரணமாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், இதனால் இன்று பீர் கிடைக்கவில்லை என அப்பகுதி குடிமகன்கள் குமுறி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி நகரில் காந்தி சாலையில் 1993இல் இருந்து செயல்பட்டு வருகிறது அரசு அருங்காட்சியகம். தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி இந்த அருங்காட்சியகத்தில், நடுகல் (வீரக்கல்), பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல்சிலைகள், மரப் படிமங்கள், கலைப்பொருட்கள், பனையோலைகள், தொல்தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மனித உடல் மாதிரிகள் ஆகியன உள்ளன.
ஓசூர் டவுன் போலீசார் காரப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மக்களுக்கு இடையூறு செய்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் ஓசூர் காரப்பள்ளி செந்தில் நகரைச் சேர்ந்த நாகராஜ் (44) என்பதும், மேலும் ரவுடி பட்டியலில் உள்ள அவர் மீது ஓசூர் டவுன், அட்கோ, மத்திகிரி காவல் நிலையத்தில் 17 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இவரை போலீசார் கைதுசெய்தனர்.
கிருஷ்ணகிரியில் நடந்துவரும் 5ஆம் கட்ட நீச்சல் பயிற்சியில் 67 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றுவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நீந்த கற்றுக்கொள்வதற்கான முதல்கட்ட பயிற்சியில் 16 பேரும், இரண்டாம் கட்டமாக 61 பேரும், மூன்றாம் கட்டமாக 101 பேரும், நான்காம் கட்டமாக 83 பேரும் நீச்சல் பயிற்சி பெற்றனர். மொத்தமாக 339 பேர் பயிற்சி பெற்றுள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் தெரிவித்தார்.
லாரி ஓட்டுநரான பழனிசாமி (50), குஜராத் மாநிலத்தில் இருந்து சேலத்தில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்கு இயந்திர சாதனங்களை ஏற்றிக் கொண்டு நேற்று சென்றாா். சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரியை அடுத்த கொல்லப்பள்ளி என்ற இடத்தில் சென்ற போது, திடீரென சாலையின் குறுக்கே தேசிய நெடுஞ்சாலைத் துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் விரிவாக்கப் பணியால் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இளைஞர்கள், விளையாட்டு வீரர்களுக்கான சாகச விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கிருஷ்ணகிரி கலெக்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், இந்திய அரசின் சார்பில், 2023ம் ஆண்டிற்கான ‘டென்சிங் நார்கே தேசிய சாகச’ விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விருது பெறுபவர்களுக்கு ₹15 லட்சம், வெண்கல சிலை வழங்கப்படும். மே 31-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மீட்பு மருத்துவ அவசர சிகிச்சை மையம் அமைக்கவுள்ள கட்டிட வளாகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப. இன்று 27.05.2024 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் மரு.பூவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.மது மற்றும் மருத்துவர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அனகோடி பகுதியிலிருந்து சந்தூர் நோக்கி நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற பொன்னுசாமி (45) என்பவர் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேருந்து நிலையம் எதிரே இன்று காலை 11 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் சாலையை கடக்கும் போது பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவேரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க செல்வம் என்பவர் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஆத்தூர் மாரியம்மன் கோவில் என்ற இடத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வந்த சிங்காரப்பேட்டை அடுத்த மல்லிப்பட்டியைச் சேர்ந்த மணி மற்றும் பெருமாள் ஆகிய இருவரும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sorry, no posts matched your criteria.