India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளிகல்வி துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக பிறப்பு முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, இன்று துவக்கி வைத்தார். தொடர்ந்து 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 42, 325 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குடும்ப அட்டைகளில் பெயர் திருத்தம், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்ற கோரிக்கையை நிவர்த்தி செய்யும் பொருட்டு நாளை 14.12.2024 காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை பொதுமக்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் போச்சம்பள்ளி வட்டத்தில் வட்ட அலுவலர் மூலம் தாமோதரஹள்ளியில் நடைபெறுகிறது. மக்கள் கலந்து கொண்டு பயன்பெற மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே முதல்முறையாக திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆசிரியர்கள் வெங்கடேசன் மற்றும் செந்தில் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி, இருசங்கு குட்டை என்ற கிராமத்தில் மூன்று இடங்களில் குறியீடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஒசூரில் 2000 ஏக்கர் பரப்பில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளை கையாளக்கூடிய வகையில் பன்னாட்டு விமான நிலையம் விரைவில் அமைக்கப்படவுள்ளது. தமிழக அரசின் ‘டிட்கோ’ நிறுவனம் தேர்வு செய்த 4 இடங்களில் இந்திய விமான நிலையங்களின் ஆணைய அதிகாரிகள் செப்டம்பர் இறுதியில் ஆய்வு செய்தனர். AAI பரிந்துரை கிடைத்த பின் இடம் தேர்வு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் திருமதி. சரயு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் குறைகளை களைய பொதுமக்கள் சிறப்பு குறைதீர் கூட்டம் சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்பட உள்ளது. அதன்படி வரும், டிசம்பர் 14ல் மாரிசெட்டிஅள்ளி, பர்கூர்,கொத்தலகுட்டை, போச்சம்பள்ளி, தாமோதரஅள்ளி பகுதிகளில் நடைபெற உள்ளது. இதனை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையில் இருந்து மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பெற்றோர்கள் பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், வானிலை மையம் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மழை தொடர்பாக எந்த ஒரு அறிக்கையும் வராததால் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.
கிருஷ்ணகிரி சேர்ந்த 10ம் வகுப்பு அரசு பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் 2024-25ம் ஆண்டிற்கான முதலமைச்சரின் திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.24 முதல் 18.12.24 வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மணிப்பூர் கலவரத்தை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து ஓசூரில் காந்தி சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். ஓசூர் மாநகர தலைவர் தியாகராஜன், மூத்த காங்கிரஸ் நிர்வாகி மைஜா அக்பர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆர்டிஐ மாவட்ட பொறுப்பாளர் அசேன், மாநகர பொதுச்செயலாளர் இர்ஷாத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. கடந்த 2ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரு மழை வெள்ளம் ஏற்பட்டு, காவல் நிலையம், வங்கி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கியது. இதில் தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெரும்பாலான ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தன. தற்போது ஆவணங்களை வெயிலில் காய வைக்கும் பணியில் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலினாலும், மழை வெள்ளத்தாலும் 10, 11,12 -ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை இழந்த மாணவ, மாணவிகள் இம்மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள் மற்றும் முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகம் / மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.