India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியில் பில்டிங் கடையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், கடையின் உரிமையாளர் ஜெய்சங்கர் மற்றும் உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் வெடி விபத்து ஏற்பட காரணமாக இருந்த டிராக்டரின் உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் ஓட்டுனர் மாரியப்பன் போலீசாரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த முள்ளம்பட்டி கிராமத்தில் இன்று காலை விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்த ஐந்து பேர் மீது திடீரென மலை தேனீக்கள் தாக்கியதில் சின்னகூத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி (45) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் காந்தி, கல்யாணி, ஜெயலட்சுமி, சின்னசாமி ஆகிய நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேஆர்பி அணையில் கடந்த 5 ஆண்டுகளாக பருவதராஜ மீனவர் நல கூட்டுறவு சங்கத்தினர் டெண்டர் எடுத்து மீன்பிடித்து வந்தனர்.டெண்டர் காலம் முடிந்த நிலையில் அணையில் மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டது. இதனால் பழைய பேயனப்பள்ளி, தாளாப்பள்ளி, துரிஞ்சிப்பட்டி, பெல்லாரம்பள்ளி ஆகிய 4 கிராமத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, மீண்டும் மீன் பிடிக்க அனுமதி கோரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பஸ் நிலையம் எதிரில் தமிழக முதல்வரின் மக்களைத்தேடி துரித சேவைத் திட்டத்தின் கீழ், S-495 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், போச்சம்பள்ளி தலைமையகம் காய்கறி விற்பனை அங்காடி மற்றும் சில்லறை விற்பனை நிலையம் திறப்பு விழாவில் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி ஒன்றியம், B.திப்பம்பட்டி K.K.116 VPB தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் திறப்புவிழா நேற்று நடந்தது. இதில் பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியில் இன்று மாலை வெல்டிங் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்த உரிமையாளர் ஜெய்சங்கர் (42) மற்றும் பிரகாஷ் (37) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ஜெய்சங்கர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். படுகாயம் அடைந்த பிரகாஷ் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அனுப்பப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒப்பம் ஊராட்சி மருதேப்பள்ளி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டம் கோமாரி நோய் 6-வது சுற்று தடுப்பூசி முகாமினை பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தே.மதியழகன் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு ஆகியோர் இன்று துவக்கி வைத்தனர். உடன் கால்நடை இணை இயக்குனர்,அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்தும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ மதிப்பீட்டு முகாம் நாளை (டிச 17) கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காலை 9.30 மணி முதல் மதியம் 1 வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் தேசிய அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த தொகரப்பள்ளி வனப்பகுதியில் சாலை வளைவில் திரும்பும் போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீஸ் விசாரணையில் பெருகோபனபள்ளி சேர்ந்த தமிழரசு மற்றும் அவரது நண்பர் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என தகவல் வந்துள்ளது. மத்தூர் போலீசார் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 21 ஆயிரத்து 99 கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் 6-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் (கோமாரி நோய் தடுப்பூசி) நாளை திங்கட்கிழமை முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஜனவரி 20 ஆம் தேதி வரை குறிப்பிட்ட தேதிகளில் நடைபெற உள்ளது என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்….
Sorry, no posts matched your criteria.