Krishnagiri

News November 2, 2024

சூரிய தகட்டை பொருத்தி மின்சாரம் தயாரிக்க விண்ணப்பிக்கலாம்

image

சூரிய சக்தியை பயன்படுத்தி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும், பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சார திட்டம், கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன்படி, அனைத்து வீட்டு மின் இணைப்பு உரிமையாளர்களும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், வங்கிகள் மூலம் உடனடியாக கடன் பெறலாம். இதற்கு www.solarrooftop.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார்.

News November 1, 2024

கிருஷ்ணகிரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி,சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News November 1, 2024

கிருஷ்ணகிரி மக்களே உங்க கொண்டாட்டம் எப்படி இருந்தது?

image

தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள், காலையிலே எண்ணேய் தேய்த்து குளித்தும், பலகாரங்கள் செய்து அதை உற்றார் உறவினர்களுக்கு கொடுத்தும், அறுசுவை உணவு சாப்பிட்டும், புத்தாடைகள் அணிந்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும், திரையரங்குகளில் பலர் புதுப்படங்களை கண்டு ரசித்து தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். இதில், உங்களை மகிழ்வித்தது எது? COMMENT பண்ணுங்க.

News November 1, 2024

சூளகிரி அருகே கோவில்களில் நகை, பணம் கொள்ளை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள நான்கு கோவில்களில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை நேற்றிரவு மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். உலகம் பாரத கோவில் மற்றும் கூலியம் கிராமத்தில் மூன்று அம்மன் கோவில்களில் மர்மநபர்கள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் உண்டியலில் இருந்து திருடியுள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் சூளகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 1, 2024

சொத்து தகராறில் இருவர் படுகொலை; தம்பி வெறிச்செயல்

image

ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி அருகேயுள்ள மோட்டூர் பகுதியில் குடும்பத்தகராறில் மாரிமுத்து (37) மற்றும் மனைவி ருக்மணி (32) ஆகியோர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டனர். கணவனின் தம்பி முருகன் குடிபோதையில் வெறிச்செயல் புரிந்ததாக கூறப்படுகிறது.  கொலை செய்த முருகனை தீவிர தேடுதலுக்கு பிறகு சாமல்பட்டி போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

மு.தம்பிதுரைக்கு அதிமுகவினர் வாழ்த்து

image

நாடாளுமன்ற இரு அவைகளின் நிலைக் குழு தலைவராக மாநிலங்களவை உறுப்பினருமான மு. தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி செயலாளர் வெற்றிச்செல்வன், மாதையன், தூயமணி, பிரபாகரன் உள்பட அதிமுக நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

News October 31, 2024

கிருஷ்ணகிரி மக்களே பாதுகாப்பாக கொண்டாடுங்க

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கிருஷ்ணகிரி மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்.

News October 29, 2024

இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று 29.10.2024 இரவு 10:00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 29, 2024

சூளகிரி அருகே இளைஞரிடம் கஞ்சா பறிமுதல்

image

சூளகிரியை அடுத்த அட்டகுறுக்கி கிராமத்தில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி  நடத்தப்பட்ட சோதனையில், அதே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் ( 23 ) என்பவர் சுமார் 60 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையெடுத்து இளைஞரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

error: Content is protected !!