India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒசூர் அரசு மருத்துவமனையில் இன்று நவம்பர் 27ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த 11 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. திமுக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எல்.ஏ பிரகாஷ் குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். இதில் மேயர் சத்யா, மாமன்ற உறுப்பினர் என்.எஸ் மாதேஸ்வரன், அவைத் தலைவர் யுவராஜ் உள்ளிட்ட திமுக இளைஞர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே, இன்று, கிழக்கு மாவட்டத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் பர்கூர் எம்.எல்.ஏ தே.மதியழகன் தலைமையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், 4800 பேர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை திமுக பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம் செய்திருந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறப்பாக பணியாற்றிய பெண்களுக்கு ஔவையார் விருது வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் டிச 31ஆம் தேதிக்குள் https://awards.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருது பெறுபவர்களுக்கு ரூ.1.50 லட்சம் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
ஓசூர் அருகே உள்ள குருபசப்படி கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு விவசாயி மீசை எல்லப்பா (67) என்பவர், அவரது மூத்த மகன் சுப்பிரமணியனை மாடுகளை கேட்டதற்காக கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளார். இவ்வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி சந்தோஷ், மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
தேன்கனிக்கோட்டை அருகே பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் வாரிசு சான்றிதழ் கோரி இணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.முருகேசனிடம் வி.ஏ.ஒ.தம்பிதுரை, உதவியாளர் புஷ்பா ஆகிய 2 பேரும் ரூ.4 ஆயிரம் கேட்டதாகத் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் முருகேசன், மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ரூ.4ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.எ.ஒ மற்றும் உதவியாளரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி, திப்பனப்பள்ளி ஏரிக்கரை ஓரத்தில் வனத்துறை சார்பாக பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் நேற்று நடந்தது. மேலும், கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 25 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், திப்பனப்பள்ளி ஏரிக்கரையில், வனத்துறை சார்பாக, பசுமை தமிழ்நாடு இயக்கம் ஒரு கோடி பனை விதை நடுதல் 2024-2025 திட்டம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 2000 பனை விதைகள் நடவுசெய்யும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று 25.11.2024 துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனை பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்த 593 மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மதிமுக கட்சி கொடி ஏற்று விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு வளமான கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்றார். இதில், மதிமுக நிர்வாகிகள் பாலமுரளி, தலைமை செயற்குழு உறுப்பினர் நவமணி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற SSR 2025 சிறப்பு முகாமில் பல்வேறு வகையான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக, 16.11.2024 முதல் 24.11.2024 வரை SSR 2025 சிறப்பு முகாமில் மொத்தம் 28,307 பெறப்பட்டுள்ளன. பெறப்பட்டுள்ளன. இதில், ஊத்த்கரைரை, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர் என மாவட்டம் முழுவதும் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.