India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கபீர் புரஸ்கார் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மூலம் டிச 15 ஆம் தேதிக்கு முன் விண்ணப்பிக்கலாம்.
ஓசூர் மாநகரில் 4 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், ரூ.8 ஆயிரம் கோடி–யில், விடுபட்ட பகுதிகளுக்கும், இன்னும் 25 ஆண்டுகளுக்கு பிறகு இருக்கப்போகும் மக்கள் தொகை போன்றவற்றை கணக்கிட்டும் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை அடுத்து வரும் மாதங்களில் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அக்ரஹாரம் தென்பெண்ணை ஆற்றில் இன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தீயணைப்பு துறையினரால் மீட்கப்பட்டது. உடலை மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீசார் இன்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போச்சம்பள்ளி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-2025 ஆண்டிற்கான நேரடி சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.10-ம் வகுப்பு கல்வித்தகுதியுடன் 2ஆண்டு ஐ.டி.ஐ பயிற்சி முடித்து 12-ம் வகுப்பு மொழி தேர்வு மட்டும் எழுதி சான்றிதழ் பெறலாம். வயது வரம்பு 14 முதல் 40 வரை.மகளிருக்கு வயது வரம்பு இல்லை. மேலும் விவரங்களுக்கு 9443081454,9789681995,9787970227 எண்களில் தொடர்பு கொள்ளவும்.
ஒசூா்,தோ்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி (26).இவருடைய நண்பா்கள் சேகா் (28),இம்ரான்கான் (27) ஆகிய மூவரும் அக்டோபர் மாதம் தோள்பட்டையில் மது அருந்தியபோது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சேகர், இம்ரான் கான் இருவரும் சேர்ந்து குப்புசாமியை கொலை செய்தனர் .இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை அளித்த பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
தருமபுரி மண்டல கனரா வங்கி சாா்பில் ஒசூரில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களின் குழும ஆலோசனை கூட்டம் ஹில்ஸ் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கனரா வங்கி நிா்வாக இயக்குநா் முகா்ஜி கலந்துகொண்டு தருமபுரி மண்டலத்தில் ரூ. 800 கோடி அளவுக்கு சிறு,குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.ரூ. 550 கோடிக்கு ஓசூரில் உள்ள சிறு,குறுந்தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பாக கொடிநாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரயு, 30 முன்னாள் படை வீரர் குடும்பத்தினருக்கு ரூ.8 இலட்சத்து 83 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை இன்று வழங்கினார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) புஷ்பா உள்ளிட்ட பலர் உள்ளனர்.
ஓசூர் சித்தனப்பள்ளியில் உள்ள ஸ்ரீ சைதன்யா பள்ளி சார்பில் சாலையில் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் போக்குவரத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கையில் ஏந்தியபடி ஓசூர் ஜிஆர்டி சர்க்கிள் பேருந்து நிலையம் உள்ளிட்ட பிரதான சாலைகள் வழியாக போக்குவரத்து விழிப்புணர்வு பேரணியாக சென்றனர்.
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காலை 9 மணி மேடுஹல் 5 மணி வரை மின்தடை செய்யப்படவுள்ளது. மின்தடை செய்யப்படும் இடங்கள், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், மகாலட்சுமி லேஅவுட், நல்லூர், பாகூர், கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டபாலி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, உப்பரப்பள்ளி, ஜகீர்கொடிப்பள்ளி.
கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பாக நாளை கிருஷ்ணகிரி தனியார் கே ஆர் சி மஹாலில் கழக வளர்ச்சி குறித்தும் தகவல் தொழில்நுட்ப பிரிவு வளர்ச்சி குறித்தும் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் மாவட்டத்திலுள்ள கழக ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.