Krishnagiri

News February 10, 2025

கிருஷ்ணகிரிக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

image

ரகசிய கேமரா விவகாரத்தில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அடிப்படை உறுப்பினரில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு என 2 ஆக பிரிக்கப்பட்டு 2 நகரங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி கிழக்கு நகர பொறுப்பாளராக எம்.வேலுமணியும், மேற்கு நகர பொறுப்பாளராக அஸ்லம் ரகுமான் ஷெரீப்பும் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News February 9, 2025

கிருஷ்ணகிரி திமுக நகர செயலாளர் சஸ்பெண்ட் 

image

கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த விவகாரதில், தி.மு.க., நகர செயலாளரும், நகராட்சி தலைவரின் கணவருமான நவாப் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கமிஷனர் அறைக்குள் கடந்த ஜன.29ல்  நுழையும் போது, அங்கிருந்த டிஜிட்டல் கடிகாரத்தில், ‘பீப்’ சத்தம் கேட்டது. இதையடுத்து, ஊழியர்கள் கடிகாரத்தை கழற்றி பார்த்தபோது உள்ளே ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருந்தது தெரிந்தது.

News February 9, 2025

மத்திய அரசு நிறுவனத்தில் 400 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் BHEL நிறுவனத்தில் உள்ள இன்ஜினியர், மேற்பார்வையாளர் காலிப்பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 400 காலிப்பணியிடங்கள். இன்ஜினியரிங் டிரைய்னி – ரூ.50,000 – ரூ.1,60,000, மேற்பார்வையாளர் டிரைய்னி ரூ.32,000 – ரூ.1,00,000 வரை சம்பளம் வழங்கப்படும். கணினி வழி தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும். பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் வரும் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.<> ஷேர் பண்ணுங்க<<>>

News February 9, 2025

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பொதுமக்கள்

image

கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து. திங்கள் கிழமை பள்ளி மாணவர்கள் அணைவருக்கும் மன நல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
பள்ளியில் கண்காணிப்பு கேமரா, கூடுதல் கழிவறை, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்கல்வி வரை அனைத்து செலவுகளையும் அரசு ஏற்க வேண்டும்,  அரசு வேலைக்கு உத்திரவாதம் வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணம் வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடப்பட்டது.

News February 9, 2025

மொபைல் போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி

image

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு, 30 நாட்கள் மொபைல் போன் பழுது நீக்குவதற்கான இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு, 8ஆம் வகுப்பு படித்த,18 – 45 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் வரும் 12ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 94422 47921, 90806 76557 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News February 8, 2025

ஒகேனக்கலில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

ஒகேனக்கலில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்பு திட்டத்தின் கீழ், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் இயல்பு நீரேற்று நிலையத்தில், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட செயல்பாடுகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

News February 8, 2025

கிருஷ்ணகிரியில் தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

image

பர்கூர் அருகே அரசு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தமிழக அரசை கண்டித்து இன்று பிப்ரவரி 08, அதிமுக சார்பில் எம்.எல்.ஏ கே.பி.முனுசாமி தலைமையில் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News February 8, 2025

விபத்தில் சிக்கியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

image

சூளகிரியை அடுத்த சப்படி என்ற இடத்தில், சென்ற பிப்.,2ஆம் தேதி பைக்கில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த நபருக்கு, தலை முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்களை அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக சூளகிரி போலீசார், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 8, 2025

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு தநியுதவி

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், குறு / சிறு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பத்தினரும் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு விபத்து, இயற்கை மரண நிவாரண உதவித்தொகை, ஈமச்சடங்கிற்கான நிதியுதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

நான்கு நாட்கள் “மக்களுடன் முதல்வர்” திட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசிக்கும் ஊராட்சிகளில் 12.02.2025, 13.02.2025, 18.02.2025 மற்றும் 19.02.2025 ஆகிய 4 நாட்கள் “மக்களுடன் முதல்வர்” திட்டம் 3ஆம் கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!