India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தேன்கனிக்கோட்டை அடுத்த தாவரகரை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (35) விவசாயி. இவரது 10 வயது மகள் தாவரகரை அரசு தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று(டிச 20) காலை அவர் கழிவறை சென்ற போது கழிவறை அருகே இருந்த மின்வயரை தொட்டுள்ளார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். எனவே, போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் முழு கொள்ளளவு 52 அடியாக உள்ளது. இந்நிலையில் இன்று நீர் இருப்பு 51.20 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 418 கன அடி வந்துள்ள நிலையில், நீரின் வெளியேற்றம் வினாடிக்கு 550 அடியாக உள்ளது. மீண்டும் சில மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் கிருஷ்ணகிரி பகுதியில் மழை பெய்தால் ஓரிரு நாட்களுக்குள் கே.ஆர்.பி. அணை நிரம்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் இன்று அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, மேற்கு மாவட்ட திமுக சார்பில் ஒசூர் எம்.எல்.ஏ பிரகாஷ் தலைமையில் ஓசூர் மாநகராட்சி, ராம்நகர் அண்ணாசிலை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிகழ்வில் மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (2-ஆவது தளம்) நாளை காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒசூர்- தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள எஸ்.முதுகானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட செட்டிப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணி முடிந்து வெளியில் வந்த 5 பெண்கள் நேற்று சாலையைக் கடக்க முயன்றனர். அந்த வழியாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியான பெண்கள் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ யாதவ், சந்தா என்பது தெரியவந்தது. 3 பேரில் 2பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மையத்தை திறந்து வைத்தார்.தொடர்ந்து பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் ஆட்சியர் கே.எம்.சரயு, பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
தமிழகத்தில் 10,11மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடமிருந்து இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க 17.12.2024 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில் தொடர் கனமழையால் ஏற்பட்ட இடர்பாடுகள் காரணமாக கால அவகாசம் 20.12.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனித்தேர்வர்கள் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20/12/2024 வெள்ளிக்கிழமையன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்துள்ள மொள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது தென்னந்தோப்பில் உள்ள மூன்று பேரை நேற்று திடீரென மலை தேனீக்கள் கொட்டியது. பெரியசாமி என்பவரை தேனீக்கள் கொட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மேலும் படுகாயம் அடைந்த காந்தி, கல்யாணி, ஜெயலட்சுமி, சின்னசாமி ஆகிய 4 பேர் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதியில் பில்டிங் கடையில் நேற்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில், கடையின் உரிமையாளர் ஜெய்சங்கர் மற்றும் உதவியாளர் பிரகாஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்நிலையில் வெடி விபத்து ஏற்பட காரணமாக இருந்த டிராக்டரின் உரிமையாளர் சங்கர் கைது செய்யப்பட்டார். டிராக்டர் ஓட்டுனர் மாரியப்பன் போலீசாரின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sorry, no posts matched your criteria.