Krishnagiri

News January 5, 2025

 மிதிவண்டி போட்டியில் 169 மாணவ, மாணவிகள் பங்கேற்பு

image

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டுத் திடலில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கிருஷ்ணகிரி பிரிவு சார்பில் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா விரைவு மிதிவண்டி போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 169 மாணவர், மாணவிகள் கலந்துக்கொண்டனர். முதலிடம் பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பராசான்று வழங்கப்பட்டது

News January 4, 2025

ஓலா கம்பெனி பெண் ஊழியர் கொலை வழக்கில் இருவர் கைது

image

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூர் பகுதியில் தீபா என்ற இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியை சேர்ந்த மிதுன் மற்றும் கவியரசு ஆகியோரை ஊத்தங்கரை டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் இன்று கைது செய்துள்ளனர். தீபாவின் கணவர் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் இருந்த நிலையில் அவருக்கு இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

News January 4, 2025

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு 

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் SC/ST சமூகத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படுகிறது. +2 (அ) டிகிரி முடித்த 18- 23 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பயிற்சிக்கான செலவை தாட்கோ நிறுவனம் ஏற்றுக்கொள்ளும். ஆரம்பத்தில் ரூ.22,000 வரையும் திறமைக்கேற்ப ரூ.70,000 வரை ஊதியம் பெறலாம். இதற்கு www.tahdco.com என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News January 4, 2025

பொங்கலுக்கு வழங்கப்படும் கரும்புகளின் தரம் குறித்து ஆய்வு

image

ஊத்தங்கரை வட்டம், சாமல்பட்டி ஊராட்சி, எஸ்.மோட்டூர் கிராமத்தில் தை பொங்கல் திருநாள் 2025 முன்னிட்டு, குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு வழங்கும் பொருட்டு, கரும்பு கொள்முதல் செய்யும் கரும்பு தோட்டத்தில் கரும்பின் தரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு, நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.உடன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பச்சியப்பன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News January 4, 2025

அரசின் சாதனைகளை கூறி தேர்தல் பணியை தொடங்க அறிவுறுத்தல்

image

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அனைத்து அணிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் கலந்துகொண்டு 174 பேருக்கு வேட்டி – சேலை, இனிப்பு, காலண்டர் ஆகியவை வழங்கினார். மேலும், தேர்தலுக்கு அனைவரும் தயாராக இருக்கும் பொருட்டு தமிழக அரசின் சாதனைகள், தொலைநோக்குத் திட்டங்கள் பணிகள் குறித்து மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும் என கூறினார்.

News January 3, 2025

மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது

image

ஒசூா் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வந்த கெலமங்கலம் பகுதியைச் சோ்ந்த 80 வயது மூதாட்டியை புதன்கிழமை இரவு அவரது சொந்த ஊரான கெலமங்கலத்தில் அழைத்து சென்று விடுவதாக கூறி அழைத்து சென்ற நபர், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் வைத்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தப்பியோடிய நிலையில் ஓசூர் மாநகர மகளிர் காவல் நிலைய போலீசார் ஏர்க்கல்நத்தம் கிராமத்தை சோ்ந்த லட்சுமணன்(35) என்பவரை நேற்று கைது செய்தனர்.

News January 3, 2025

ஊத்தங்கரை அருகே பெண் ஒருவரை கத்தியால் குத்தி கொலை

image

ஊத்தங்கரை அடுத்த கஞ்சனூரில் தீபா என்பவர் கணவர் இறந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் இயங்கி வரும் பிரபல இருசக்கர வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இன்று  வேலை முடித்து விட்டு வரும் போது மர்மநபர் கத்தியால் குத்தியதில்  அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை.

News January 2, 2025

சிறப்பு அமலாக்க அமைப்பின் கூட்டமர்வு ஆய்வுக் கூட்டம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப் பொருட்கள் மீதான தடையை அமல்படுத்தவும், உயிரி மருத்துவ கழிவுகளை முறையாக மேலாண்மை செய்வதற்கும் சிறப்பு அமலாக்க அமைப்பின் கூட்டமர்வு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் இன்று (02.01.2025) நடைபெற்றது. உடன் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் செல்வகுமார், உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News January 2, 2025

அஞ்சலக ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

image

கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் ஜன 8ஆம் தேதி கோட்ட அளவிலான அஞ்சலக ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள், தங்களது குறைகள், புகார்களை பென்சன் அதாலத் என தபால் உறையின் மீது எழுதி அனுப்பலாம். அதில் ஓய்வூதிய கணக்கு எண் உட்பட பிற விவரங்களை முழுமையாக குறிப்பிட வேண்டும் என்று கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் தெரிவித்தார்.

News January 2, 2025

ஓசூர் வீராங்கனைக்கு அர்ஜுனா விருது 

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த நித்யஸ்ரீ சுமதி சிவன் 2024 பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகளில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதேபோல் 2022 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஒற்றையர், கலப்பு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவுகளில் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் தட்டி தூக்கினார். அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு இன்று அர்ஜுனா விருது அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!