Krishnagiri

News January 10, 2025

ஓசூரில் ரூ.7000 கோடி முதலீடு செய்யும் டாடா நிறுவனம்

image

ஓசூரில் டாடா நிறுவனம் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். விரிவாக்கம் செய்தபின் ஐபோன் பாகங்களை அசெம்பிள் செய்யும் பணி தொடங்கும் எனவும் இதற்கான அறிவிப்பு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 10, 2025

ஒசூர் தளி அருகே தலை துண்டித்து கொலை

image

ஒசூர் தளி அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு கும்ளாபுரம் குளத்தின் அருகே ஆண் ஒருவரின் தலை எரிந்த நிலையில் கிடந்தது. தளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கும்ளாபுரத்தை சேர்ந்த தொழிலாளி ஷான்பாஷா (55) என்பது தெரிந்தது. இதையடுத்து தலையை கைப்பற்றிய போலீசார் அவரது உடலை தேடி வருகின்றனர்.

News January 10, 2025

ஓசூர் நீதிமன்றத்திற்கு துப்பாக்கிகளுடன் வந்த 10 பேர் கைது

image

ஓசூர் அருகே கொளதாசபுரம் பகுதியில் கடந்த ஆண்டு செப்.18ல் கர்நாடக மாநிலம் சூளகுண்டாவைச் சேர்ந்த ரேவந்த்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் உள்ள கொலையாளிகள் 5 பேர் நேற்று ஓசூர் நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்தனர். அப்போது அவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கிகளுடன் 5 பேர் வந்ததால் அவர்கள் 10 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.

News January 10, 2025

மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

image

கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, விடுதிகளில் தங்கிப் பயிலும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு சிறப்பு தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சியை ஆட்சியர் கே.எம்.சரயு, நேற்று (ஜன.09) துவக்கி வைத்து, உயர்கல்வி குறித்த வழிகாட்டி கையெட்டை வழங்கினார்.

News January 9, 2025

கந்திகுப்பம் நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கிய ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கூட்டுறவு நியாயவிலை கடையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு கலந்துகொண்டு பொங்கல் தொகுப்பை குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். இதில் மாவட்ட மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 9, 2025

குடியரசு தினவிழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்

image

 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குடியரசு தின விழா முன்னேற்பாடுகள் குறித்து, பல்வேறு அரசுத் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெறற்து. நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குரல்,ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, தீயணைப்பு துறை,பள்ளி கல்வித்துறை,ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

News January 9, 2025

பொங்கல் வாழ்த்து தெரிவித்த பர்கூர் எம்.எல்.ஏ.

image

தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் முன்னிட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார். 

News January 9, 2025

ஓசூருக்கு ரூ.1500 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள் 

image

நேற்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் ஓசூர் மாநகராட்சிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் ஓசூர் மாநகராட்சிக்கு ரூ.1500 கோடி செலவில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு 4 மண்டல அலுவலகங்கள், புதிய பேருந்து நிலையம், சந்தை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் கூட ரூ.547 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது என கே.என் நேரு தெரிவித்தார்.

News January 8, 2025

தக்காளி நாற்றங்கன்றுகளை வழங்கிய கலெக்டர்

image

பெண்ணேஸ்வரமடம் கிராமத்தில், நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் தோட்டக்கலைத்துறை சார்பாக பயனாளிகளுக்கு தக்காளி நாற்றங்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு (08.01.2025) இன்று வழங்கினார். இதில் அரசு அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 8, 2025

எச்.எம்.பி.வி. தொற்று தமிழக எல்லையில் கண்காணிப்பு

image

எச்.எம்.பி.வி. என்ற நுரையீரலை பாதிக்கும் புது வகையான வைரஸ் பெங்களூருவில் 2 பேருக்கு இருப்பது நேற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழக எல்லையான ஓசூரைச் சேர்ந்த மக்கள் பல்லாயிரம் பேர் பல்வேறு தேவைகளுக்காக தினமும் பெங்களூர் சென்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக எல்லையான ஓசூர் ஜூஜுவாடி செக் போஸ்டில் வைரஸ் தொற்று கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

error: Content is protected !!