India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி வேளாண் விற்பனை மற்றும் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள தகவலில் ஓசூர் அடுத்த பேரண்டிபள்ளி பன்னாட்டு மலர்கள் ஏல மையத்தில் கடந்த 2023 ஆண்டு 7,076 கொய்மலர் கட்டுகள் ரூ.6.53 லட்சம் அளவில் வர்த்தகம் நடைபெற்ற நிலையில் 2024 ஆண்டு மொத்தம் 82,450 கொய்மலர் கட்டுகள் ஆன்லைன் மற்றும் டச்சு முறையில் ரூ.80.79 லட்சம் அளவில் வர்த்தகம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர்.
மத்தூர் ஒன்றியம் மத்தூர் நாடகத் தந்தை டி.டி. சங்கரா ஸ்வாமி 120 ஆம் ஆண்டு ஆராதனை விழா பேரணி நடைபெற்றது. இதில் நாடகக் கலைக்குழு, பேண்ட் இசைக்குழு மயிலாட்டம் ஒயிலாட்டம் காவடி கரகாட்டம் கோலாட்டம் கும்மி தாரை தப்பட்டை முழங்க பேரணி ஈஸ்வரன்கோயில் இருந்து புறப்பட்டு சரவண மகாலில் மாநாடு திடலில் முடிவற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் பகுதியில் வசித்து வரும் சிலர் பொதுப்பாதை நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாக அதே பகுதியைச் சோர்ந்த நாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதையடுத்து காவல்துறை உதவியுடன் கிருஷ்ணகிரி வட்டாட்சியர் வளர்மதி தலைமையில் நேற்று 22 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
ஓசூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்த சிறுமியை, அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்கள், தனியாக அழைத்துச் சென்று சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தாயார் ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மாணவர்களை கைது செய்து, சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமப்புரங்களில் BSNL. சேவை சிக்னல் கிடைக்காததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் உள்ளிட்ட விவசாயிகள் இன்று BSNL. தலைமை அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். மேலும், புகார் மீது அதிகாரிகள் முறையாக பதில் அளிக்கவில்லை என்று, இது சம்பந்தமாக போராட்டம் நடத்தப் போவதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
காவேரிப்பட்டணம் அருகே உள்ள கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் சப்பாணிப்பட்டி பக்கமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஊா்வலம் நேற்று நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் சரயு கொடியசைத்து தொடங்கி வைத்து விபத்தில்லா பயணத்தை உறுதி செய்வதே தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவின் நோக்கமாகும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.4சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தினார்.
கெலமங்கலம் அருகே உள்ள டி.கொத்தப்பள்ளியை சேர்ந்தவர் சதீஸ், மினி லாரி டிரைவர். இவர் முள்ளங்கி பாரம் ஏற்றிக்கொண்டு மஞ்சளகிரி பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் வந்தது. இதனால் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மினிலாரி சாலையின் நடுவில் உள்ள தடுப்பின் மீது ஏறி தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்தவிபத்தில் வாகனத்தில் பயணித்த ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியரசு தினத்தன்று 31 கடைகள், 49 உணவு நிறுவனங்கள் மற்றும் 7 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 87 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றாத 25 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் மற்றும் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம் 75 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டது.
பர்கூர் அருகே நேற்று(ஜன.26) நடந்த கோர விபத்தில் இரு லாரி டிரைவர்கள் உட்பட நான்கு பேரும், 34 எருமை மாடுகளும் பலியாகின. கிருஷ்ணகிரி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த அத்திமரத்துப்பள்ளம் பகுதியில் நேற்று காலை லாரி வந்த போது டிரைவர் நாராயணன் தூங்கியதால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆறுவழிச் சாலையில் எதிர் திசையில் பாய்ந்து விபத்தை ஏற்படுத்தியது.
Sorry, no posts matched your criteria.