Krishnagiri

News February 1, 2025

அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடியில் கூடுதல் கட்டிடம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணி தொடங்கப்பட்டது. இப்பணியை டி.மதியழகன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். பின்னர், ரூ.39.60 லட்சம் மதிப்பிடத்தில் புதிய அரசு துணை சுகாதார நிலையம் திறக்கப்பட்டது. அஞ்சூர் ஊராட்சியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது. ஷேர் செய்யவும்..

News February 1, 2025

17வயது மனைவி கர்ப்பம்; கணவரை தேடும் போலீசார்

image

வேப்பனஹள்ளி அடுத்த ஐ.பி கானப்பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீகோபால் கடந்த 2024ம் ஆண்டு 17 வயது சிறுமியை கடத்திசென்று திருமணம் செய்துவிட்டு பின் தலைமறைவானார். சமீபத்தில் சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது, சிறுமி ஏழு மாத கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

News January 31, 2025

கிருஷ்ணகிரி தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் கிருஷ்ணகிரி மத்திய (வேப்பனஹள்ளி) மாவட்ட செயலாளராக G.சுரேஷ், இணை செயலாளராக முகுந்த் R.பாண்டியன், பொருளாளராக M.முருகேசன், துணை செயலாளராக P.இளையப்பன், D.மகேந்திரன் உள்ளிட்டவர்களும், கிழக்கு மாவட்ட செயலாளராக E.முரளிதரன், இணை செயலாளராக R.தாமோதரன், பொருளாளராக R.மணிகண்டன், துணை செயலாளராக R.சிவசங்கரன், J.ஜெகதீஸ்வரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஷேர் செய்யவும்..

News January 31, 2025

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மாற்றம்

image

தமிழக அரசு இன்று (ஜன.31) பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த சரயு-வை மாற்றம் செய்து, அவருக்கு பதில் தினேஷ் குமார் என்பவரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யவும்..

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர் மற்றும் ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. <>10ஆம் வகுப்பு தேர்ச்சி தகுதி <<>>போதும். ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாத சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ஷேர் பண்ணுங்க

News January 31, 2025

இராணுவ கிராமத்தில் மாபெரும் எருது விடும் விழா

image

வேப்பனபள்ளி ஒன்றியம் பச்சிக்கானப்பள்ளி இராணுவ கிராமத்தில் மாபெரும் 7ஆம் ஆண்டு எருதுவிடும் திருவிழா பிப்ரவரி 1 சனிக்கிழமை அன்று காலை 6 மணிமுதல் நடைபெறுகிறது. திமுக அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் தலைமை ஏற்று துவக்கி வைக்கிறார். இவ்விழாவில் வெற்றி பெறும் மாடுகளுக்கு முதல் பரிசாக rரூ.1,25,000 இரண்டாம் பரிசாக ரூ. 1,00,000 வழங்கப்படுகிறது. SHARE பண்ணுங்க

News January 30, 2025

ஆவின் பால் கொள்முதல் குறித்து ஆட்சியர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி நகராட்சி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க ஆவின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு, இன்று 30.01.2025 தினசரி பால் கொள்முதல் மற்றும் பால் உபபொருட்கள் தயார் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆவின் நிர்வாக அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.

News January 30, 2025

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 6 லட்சம் பயன்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் மொத்தம் 6,09,851 நபர்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் வீட்டிலேயே பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்குவதன் மூலம் நோய் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு, பக்கவிளைவுகள் மற்றும் உயிரிழப்புகள் ஆகியவை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.

News January 30, 2025

பனை கள் போதைக்காக ஊமத்தை சாறு கலந்த நபர் கைது

image

மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாலிப்பட்டி பகுதியில் மத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, வாலிபட்டி இளவரசு என்பவருக்கு சொந்தமான பனந்தோப்பில், சட்ட விரோதமாக கள் இறக்குவது தெரிந்தது. மேலும், அதிக போதையை ஏற்படுத்த, பணங் கள்ளில், உயிருக்கு ஆபத்தான ஊமத்தை சாறு கலந்து விற்பனை செய்ய வைத்திருந்தது கண்டுப்பிடிக்கபபட்டது. இதையடுத்து, இளவரசை மத்தூர் போலீசார் கைது செய்தனர்.

News January 30, 2025

ஊத்தங்கரை அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி

image

ஊத்தங்கரை தாலுகா மாரம்பட்டியை சேர்ந்தவர் ஹரிதாஸ் (32). இவர் நேற்று முன்தினம் மாலை படப்பள்ளி கூட்டு ரோடு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த ஹரிதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

error: Content is protected !!