India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பாக 709 மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 920 பயனாளிகளுக்கு ரூ.46 கோடியே 49 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று வழங்கினார். இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வருகின்ற 10.09.2024 முதல் 13.09.2024, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு 17.09.2024 முதல் 24.09.2024, பொது மக்களுக்கான போட்டிகள் 19.09.2024 முதல் 21.09.2024, மாற்றுத் திறனாளிகள் பிரிவு போட்டிகள் 23.09.2024அன்றும், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் 24.09.2024 அன்றும் கிருஷ்ணகிரி,ஓசூர், நாகரசம்பட்டி ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வந்த புகார்களின் பேரில் போலீசார் நேற்று அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தன. இது தொடர்பாக மஞ்சு ( 25) உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது வரை 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றனர்.இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லாமலிருக்க தமிழக எல்லையான கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டிகள் நாளை முதல் 24.9.24 வரை நடைபெற உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான போட்டிகள், பொதுமக்களுக்கான போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள், அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் என தனித்தனியே நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். 04343 291727, 7401703487.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் இளம்வயது திருமணங்களும், மாணவர்கள் இடைநின்றலும் அதிகமாக உள்ளன. இதை தடுக்க கல்வித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இடைநின்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கண்டறியப்பட்ட 8,823 பேரை மீண்டும் பள்ளியில் சேர்க்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓசூர் ஸ்ரீநகரை சேர்ந்த இளைஞர் குழுவினர் நேற்று சென்னை ஐகோர்ட்டு போன்று விநாயகர் அரங்கு செட் அமைத்து கோர்ட்டில் நீதிபதியாகவும், மற்றும் வக்கீல்கள், போலீசார் என 14 விநாயகர்கள் நீதி பரிபாலனை செய்யும் வகையில் செட் அமைத்திருந்தனர். கோர்ட்டில் நீதிபதியாகவும், வழக்காடும் விநாயகர்கள், குற்றவாளி கூண்டில் எலி வாகனம், கோர்ட்டு வளாகத்தில் காந்தி சிலை, இருப்பது போன்று தத்ரூபமாக வடிவமைத்திருந்தனர்.
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிவராமனுக்கு உதவியதாக இருந்ததாக நாம் தமிழர் கட்சியின் பர்கூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராக இருந்த முன்னாள் நிர்வாகி கருணாகரன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், சிவராமன் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் கருவிகளை தீ வைத்து எரித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இஸ்லாம்பூர் கிராமத்தில் பாறை குன்றுகளில் சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்து தெரு நாய்கள் மற்றும் ஆடுகளை கடித்து குதறியது. அப்பகுதியை சேர்ந்த ரத்தினம்மாள் என்பவர் மேய்ச்சலுக்கு ஓட்டி சென்ற ஆட்டை சிறுத்தை கடித்து தூக்கி சென்றது. இந்நிலையில் தாசில்தார் கோகுல்ராஜ் மற்றும் வனத்துறையினர் இஸ்லாம்பூர் பகுதியில் நேற்று ஆய்வு செய்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுத்தனர்.
யானைகளை மின்சாரம் தாக்குவதை தடுப்பதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி உள்ள 116 இடங்களில் வடிவமைக்கப்பட்ட தானியங்கி மின் நிறுத்த கருவியானது மின்வாரியம் சார்பில் பொருத்தப்படுகின்றன. இதன் மூலம் மின்சார ஒயர்களில் லேசான அதிர்வு ஏற்பட்டாலே, மின்சாரம் தானாக நின்று விடும் வகையில் இந்த கருவி–யின் செயல்பாடு அமைந்துள்ளதாக மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.