India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொங்கல் பண்டிகை மற்றும் அதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து டிஎஸ்பி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று (ஜன.12) நடைபெற்றது. காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளர் சரவணன் முன்னிலையில், கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் முரளி தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் காவேரிப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் உள்ள ஊர் கவுண்டர்கள் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மத நல்லிணக்கத்தை நிலை நாட்டும் வகையில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று (ஜன.11) நடைபெற்றது. தேன்கனிக்-கோட்டை சப்தகிரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

கிருஷ்ணகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே.

1.முதலில் <

கிருஷ்ணகிரி மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இந்த எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

நரிகானாபுரம், பாகலூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.13) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பாகலூர், ஜீமங்கலம், உலியாளம், நல்லூர், பெலத்தூர், தின்னப்பள்ளி, சூடபுரம், அலசப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, கொத்தப்பள்ளி, மற்றும் அத்திமுகம், செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், எழுவப்பள்ளி ஆகிய பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படும்.

காமன்தொட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன்குமார் (38). கடந்த 7-ம் தேதி காமன்தொட்டி நெடுஞ்சாலையில் 5 பேர் தங்களை போலீசார் என கூறி, பிராவின் குமாரை காரில் கடத்தியுள்ளனர். மேலும் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். சுதாரித்து கொண்ட பிரவீன் பணம் காரில் உள்ளது எடுத்து வருகிறேன் என கூறி தப்பினார். இதையடுத்து போலீசார் மல்லேஷ், நெல்சன் (42), வரதராஜன் (30), ராஜசேகர் (50) ஆகியோரை கைது செய்தனர்.

நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமன் (22). இவர் கடந்த மாதம் மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து சிப்காட் போலீசார் சுமனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் சுமன் மீது மேலும் சில வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் தற்போது சுமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.