India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேர்தல் பணிக்காக வந்த 850க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்
வாக்குச்சாவடி மையங்களில் போதுமான கழிவறை, குடிநீர், உணவு உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கடவரஅள்ளி வாக்கு சாவடியில் மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். அதனையொட்டி தாசில்தார் மற்றும் காவல்துறை, வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அதனால் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி காவேரிப்பட்டினம் ஜின்னா சாலை 10வது வார்டு வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக நின்று வாக்களித்தார். அவர் பேசுகையில், பொதுமக்கள் அனைவரும் தங்களது ஜனநாயக கடமையை கட்டாயம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
நாடாளுமன்ற தேர்தலில், கிருஷ்ணகிரி மக்களவையில் கிருஷ்ணகிரி தேமுதிக மாவட்ட செயலாளர் வக்கீல் முருகேசன் ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தி ஐனநாயக கடமையை ஆற்றினார். இந்த வாக்கு சாவடியில் காலை 7 மணி முதலே ஆண்களும் பெண்களுமாக வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
தேன்கனிக்கோட்டை பகுதிகளிலுள்ள மலை கிராமங்களுக்கு சாலை வசதி இல்லாததால் இன்றும் மக்கள் கால்நடையாக சென்றுவருகின்றனர். இப்போது தேர்தல் நடப்பதால் பெட்டமுகிளாளம் ஊராட்சி கடமகுட்டை கிராமத்திலுள்ள வாக்கு சாவடிக்கு சாலை வசதி இல்லாததால் கழுதை மூலம் மின்னனு வாக்குப்பதிவு மிஷின்கள் அனுப்பிவைத்தனர். மற்ற பொருட்களை தலைசுமையாக கொண்டு சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பையம்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சரயு தனது வாக்கை கணவர் நினேஷ் மற்றும் குடும்பத்துடன் பதிவு செய்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு பையனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் வாக்கினை பதிவு செய்தார். அப்போது இந்த வாக்குப்பதிவு மையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இருந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு வாக்கு மையத்திலும் ஆய்வு செய்துவருகிறார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்,
கிருஷ்ணகிரி, சேலம், தேனி, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (இன்று மாலை 7 மணி வரை) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீம்மாண்டப்பள்ளியில் தேர்தல் பறக்கும் படையினரின் தீவிர வாகன சோதனையை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால் வாக்களிக்க முடியாது. எனவே, உங்கள் பெயர் வாக்களர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இதற்கு இந்த இணையதள https://electoralsearch.eci.gov.in லிங்கை க்ளிக் செய்து சரிபார்த்து கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.