Krishnagiri

News June 7, 2024

கிருஷ்ணகிரியில் கனமழை மக்கள் மகிழ்ச்சி

image

கிருஷ்ணகிரியில் இன்று(ஜூன் 7) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. சுமார் ஒரு மணி நேரமாக மழை வருவதால் சாலை வழியாக மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. மழையினால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு கனமழை பெய்வதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

News June 7, 2024

தார்ச்சாலை தரம்: கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு

image

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், கல்லுக்குறுக்கி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பி.ஜி.புதுார் முதல் கல்லுகுறுக்கி வரை சுமார் 350 மீட்டர் தூரத்திற்கு ரூ. 11 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு நேற்று (ஜூன் 6) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News June 7, 2024

கிருஷ்ணகிரி: மழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (07.06.24) மதியம் 1 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரியில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடையில் பெய்து வந்த மழை சமீபமாக குறைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது ஓரிரு இடங்களில் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

News June 7, 2024

அதிமுகவிற்கு பாஜக முன்னாள் எம்.பி அழைப்பு

image

கிருஷ்ணகிரி பாஜக அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த முன்னாள் எம்.பி நரசிம்மன் பாஜக மாநில தலைவரின் தலைமையை ஏற்று அதிமுக கூட்டணிக்கு வரலாம் என தெரிவித்தார். மேலும்,
வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுகவினர் பலர் தன்னை சந்தித்து, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இல்லையென்றால் தோற்கடிக்கப்படுவோம் என்று தெரிவித்ததாக கூறினார். எனவே பாஜக அதிமுக கூட்டணி அவசியம் என்று தெரிவித்தார்.

News June 7, 2024

அமைச்சருக்கு கிருஷ்ணகிரி திமுக மாவட்ட செயலாளர்கள் நன்றி

image

மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி காங் வேட்பாளர் கே. கோபிநாத் அவர்கள் வெற்றி பெற்றார். அவரது வெற்றிக்காக பரப்புரை மேற்கொண்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மேற்கு மாவட்ட செயலாளர் ஓய். பிரகாஷ் ஆகியோர் நேற்று சந்தித்து நன்றி கூறினர். இந்த சந்திப்பில் கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் மற்றும் ஒசூர் மேயர் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.

News June 7, 2024

கிருஷ்ணகிரி: நேற்றைய மழை பதிவு விவரம்

image

அஞ்செட்டி- 6.40 மிமீ,
பாரூர்- 17.40 மிமீ, தேன்கனிக்கோட்டை – 35.00 மிமீ, ஓசூர்-33.10 மிமீ, கிருஷ்ணகிரி -23.40 மிமீ, நெடுங்கல்-6.00 மிமீ, பெனுகொண்டாபுரம் – 22.20 மிமீ, போச்சம்பள்ளி -17.70 மிமீ, ராயக்கோட்டை-33.00 மிமீ, சூளகிரி-20.00 மிமீ, தாலி-5.00 மிமீ, ஊத்தங்கரை-11.00 மிமீ,
சின்னார் அணை-18.00 மிமீ,கெலவரப்பள்ளி அணை-54.20 மிமீ, கே.ஆர்.பி அணை-67.60 மிமீ,பாம்பார் அணை- 37.00 மிமீ மழை பதிவாகியுள்ளது.

News June 7, 2024

கிருஷ்ணகிரி: நள்ளிரவில் குவிந்த பக்தர்கள்

image

காவேரிப்பட்டிணம் அடுத்த மலையாண்டஹள்ளி பகுதியில் எழுந்தருளியுள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ பூங்காவனத்தம்மன் ஆலயத்தில் நேற்று (ஜூன் 6) மாலை 7 மணி அளவில் வைகாசி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு துவங்கியது. இந்த வழிபாடு அதிகாலை ஒரு மணி வரை நடைபெற்றது. மேலும் ஒரு மணி அளவில் பூங்காவனத்தம்மன் திருவீதிவுலா நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து பக்தர்கள் குவிந்தனர்.

News June 6, 2024

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மழை?

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 6, 2024

கிருஷ்ணகிரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளை (07.06.24) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிமீ முதல் 40 கிமீ வரை) ஓரிரு இடங்களில் கனமழைப் பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இது தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெளியிடப்பட்டுள்ளது.

News June 6, 2024

கிருஷ்ணகிரி 7 செ.மீ மழைப்பதிவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூன்.05) பெய்த மழையின் அளவு விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, KPR அணையில் 7 செ.மீட்டரும், கேளவரப்பள்ளி அணையில் 5 செ.மீட்டரும், ஒசூர் AWS, பாமர் அணை ஆகிய பகுதிகளில் 4 செமீட்டரும், தேன்கனிக்கோட்டையில் 3 செமீட்டரும், கிருஷ்ணகிரி, பெனுகொண்டபுரம், சின்னார் அணை, ஜம்புகுட்டபட்டி, பரூர், பையூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

error: Content is protected !!