India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி பாஞ்சாலியூர் அடுத்த யாசின் நகர் பகுதியில் இன்று (செ.26) தாய் மற்றும் அவரின் பெண் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபரால் தாய் எல்லம்மாள் மற்றும் 13 வயது சிறுமி யாசிதா ஆகியோர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இரட்டை கொலை தொடர்பாக மாவட்ட எஸ்.பி தங்கதுரை நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
தவெக தலைவர் விஜய் கிருஷ்ணகிரியில் நவ.1ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய இருந்த நிலையில், தற்போது அதற்கு பதிலாக நவ.08இல் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் முதலில் சனிக்கிழமை மட்டும் சுற்றுப்பயணம் செய்து வந்த நிலையில், இப்போது ஞாயிற்று கிழமைகளிலும் மக்களை சந்திக்க உள்ளதால் நாளொன்றுக்கு 2 மாவட்டம் வீதம் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷேர் IT
ஓசூரில் அடுத்த தின்னூரில் இயங்கி வந்த ஆதரவற்றோர் காப்பகத்தில் 9-வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி, ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், சக மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், விடுதி காப்பாளர் ஷாம் கணேஷ், மேலும் மூன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
கிருஷ்ணகிரியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதன்படி, ஊத்தங்கரை (தனி) டி.எம். தமிழ்செல்வம் (ADMK), பர்கூர்-மதியழகன்(DMK), கிருஷ்ணகிரி- கே.அசோக் குமார் (ADMK), வேப்பனஹள்ளி-K.P.முனுசாமி (ADMK), ஓசூர்-ஒய்.பிரகாஷ் (DMK), தளி-ராமசந்திரன் (CPI) ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களின் பதவிக்காலம் அடுத்த ஆண்டுடன் நிறைவு பெற உள்ளது. உங்க MLA செயல்பாடுகள் குறித்து கமெண்டில் சொல்லுங்க!
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மெக்கானிக்கல், எலெட்ரிக்கல், கெமிக்கல், இன்ஸ்ட்ருமென்டேஷன் ஆகிய பிரிவில் டிப்ளமோ/பொறியியல் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.30,000-ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். <
கிருஷ்ணகிரி மக்களே கியாஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது பெரும் பிரச்னையாக உள்ளது. அவ்வாறு வசூல் செய்யக்கூடாது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை மீறி வசூல் செய்தால், முதலில் கியாஸ் ஏஜென்சியிடம் புகார் அளியுங்கள். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டாலோ அல்லது தட்டிக்கழித்து விட்டாலோ கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலத்தில் புகார் அளிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.
கிருஷ்ணகிரி மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள், <
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (செப்.26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெறும். அனைத்து அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றன. விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைய வேளாண்மை துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் நகராட்சி சார்பாக தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது. முதற்கட்டமாக 1வது வார்டில் கோட்டை பகுதியில் இன்று காலை (செ.,26) 10.00 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. அதனை தொடர்ந்து கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் கிருஷ்ணகிரி நகராட்சி அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.