India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி, ஓசூரில் அமைந்துள்ளது அருள்மிகு சந்திரசூடேஸ்வரர் திருக்கோயில். மூலவர் சந்திர சூடேஸ்வர சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். பிரகாரத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் லிங்கம் சிறப்பு வாய்ந்தது. இந்த தளத்தில் உள்ள ஈசனை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயினாலும் இங்கு வழிபட்டால் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மனக்குழப்பத்தில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சார்பில் பெண்களுக்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் சனிக்கிழமை (ஏப்.26) அன்று கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை கல்லூரியில் நடைபெற உள்ளது. 12ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ, B.A, B.SC படித்த பெண்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளாம். உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஏப்ரல்.23) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்றன. பட்டப்படிப்பு தகுதி உடையவர்கள் https://rb.gy/tns1hq என்ற இணையதளத்தில் பதிவு செய்து, இலவச பாடக்குறிப்புகள் பெற்றுப் பயன் பெறலாம் என கலெக்டர் தினேஷ் குமார் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி, கெடகானூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அங்குத்தி நீர் வீழ்ச்சியில், வற்றாத அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வற்றாத நீர் நிலையாக ஐந்து நீர் நிலைகள் இதில் உள்ளது. ஜவ்வாது மலையில் நிறைந்துள்ள மூலிகை செடிகளின் ஊடே வரும் அங்குத்தி அருவி நீர் நோய்களை தீர்க்கும் தன்மைகளைக் கொண்டுள்ளது. பார்வையாளர்களிடம் நுழைவு கட்டணமாக ₹30 வசூலிக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க மக்களே!
கிருஷ்ணகிரி தேவசமுத்திரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்ததாலும் இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்ததாலும் மூலவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்ற திருநாமம் கொண்டு அழைக்கப்படுகிறார். ஒருவர் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் அவருடைய கோரிக்கைகள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் வரும் ஏப்ரல் 25 முதல் மே 15 வரை 21 நாட்கள் கோடைகால இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டோர் கலந்து கொள்ளலாம். தடகளம், கைப்பந்து, தேக்வாண்டோ உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். திறமையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்; சான்றிதழும் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை <
நமது WAY2NEWS-ல் ரிப்போர்டராக சூப்பர் வாய்ப்பு. நீங்கள் ஆசிரியரா? வானவில் மன்ற கருத்தாளரா? ஊரக வளர்ச்சித் துறையில் ஒப்பந்த ஊழியரா? சுய உதவிக்குழு உறுப்பினரா? ஆம் என்றால் உங்கள் பணி குறித்த நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டு பண மழையில் நனையுங்கள். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.