Krishnagiri

News March 10, 2025

பண்ணந்தூர் நில தகராறில் ஒருவர் பலி

image

பண்ணத்தூர் கிராமத்தில் ஐந்து ஆண்டுகளாக மூவரிடையே நில தகராறு இருந்த நிலையில் நேற்று மார்ச் 9ஆம் தேதி மாலை நிலத்திற்கு நீர் இறைக்கும் போது ஏற்பட்ட விவகாரத்தில் மாலை 7 மணி அளவில் ராமகிருஷ்ணன் மற்றும் திருமால் என்ற இருவர் கற்களை கொண்டு தாக்கியதில் சக்திவேல் என்பவர் இரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். சக்திவேல் உடல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

News March 9, 2025

கிருஷ்ணகிரியில் அரசு வேலை

image

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 425 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வி தகுதியாக மருந்தியல் துறையில் இளங்களை அல்லது டிப்ளமோ முடித்து இருக்க வேண்டும். மாதம் ரூ.35,400 – 1.30 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு 18- 59 வயதிற்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நாளைக்குள் (மார்ச்.10) விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 9, 2025

பள்ளி மாணவியை 6 மாதம் பலாத்காரம் செய்த தொழிலாளி

image

மத்துார், ஒட்டப்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (48).தொழிலாளியான இவர்13 வயது மாணவியை மிரட்டி, 6 மாதமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். கடந்த, 2 நாட்களுக்கு முன் பள்ளியில், ‘குட், பேட் டச்’ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது அம் மாணவி, தன்னிடம் கடந்த, 6 மாதங்களுக்கு மேலாக, ‍தொழிலாளி சங்கர் மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தலைமையாசிரியரிடம் தெரிவித்துள்ளார்.சங்கர் தலைமறைவு.

News March 8, 2025

பா.ம.க துண்டு அணிந்து நடனம்; தலைமையாசிரியர் டிரான்ஸ்பர்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த மார்ச்.4ஆம் தேதி பா.ம.க., துண்டு அணிந்து பள்ளி மாணவர்கள் நடனம் ஆடியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், மாணவர்கள் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆன நிலையில், பள்ளி தலைமையாசிரியர் விஜயகுமார் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

செங்கல் சூளையில் 21 கொத்தடிமைகள் மீட்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே செங்கல் சூளையில் இருந்து 4 குடும்பங்களைச் சேர்ந்த 21 கொத்தடிமைகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழுவினர் மீட்டு, கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். புகாரின் பேரில் ஆய்வு மேற்கொண்டதில் அடிப்படை ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு குழந்தைகள் உள்பட பலர் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

News March 8, 2025

பள்ளியில் மயங்கி விழுந்து மாணவி பலி

image

ஊத்தங்கரை அடுத்த, ரெட்டிப்பட்டி ஊ.ஒ.ந.நி பள்ளியில், நேற்று மாலை, 6ஆம் வகுப்பு மாணவியர் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த இந்துமதி,11 மயங்கி விழுந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் .

News March 7, 2025

கிருஷ்ணகிரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

image

கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம் நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச் – 08) கிருஷ்ணகிரி அரசு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் இளங்கலை, முதுகலை வரை படித்த ஆண் / பெண் இருபாலரும் பங்கு பெறலாம். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!