Krishnagiri

News March 19, 2024

கிருஷ்ணகிரியில் துப்பாக்கி: கலெக்டர் அதிரடி உத்தரவு

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகளை அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்குமாறு கலெக்டர் சரயு உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. எனவே அனைத்து துப்பாக்கி உரிமைதாரர்களும் துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

News March 19, 2024

கண்காணிப்பு குழு மையத்தை பார்வையிட்ட கலெக்டர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒட்டி, 24 மணி நேரமும் செயல்படும் ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழு மையத்தை (MCMC) மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எம்.சரயு நேற்று (மார்ச் 18) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் அரசு அதிகாரிகள் பலர் இருந்தனர்.

News March 18, 2024

மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர வாகன விழிப்புணர்வு

image

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 யொட்டி 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இன்று (18.03.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் கூடுதல் ஆட்சியர் வந்தனா கர்க், வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, உள்ளிட்ட பலர் உள்ளனர்.

News March 18, 2024

கிருஷ்ணகிரி: தம்பியை தாக்கிய அண்ணன்

image

கிருஷ்ணகிரி, கே.எட்டிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் சௌந்தரராஜன். இவரது அண்ணன் சங்கர் மற்றும் இவருக்கு கூட்டு பட்டாவில் வீடு உள்ளது. சௌந்தரராஜன் கடந்த சில ஆண்டுகளாக HIV-யால் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில், இவரது அண்ணன் சங்கர் அப்பகுதியில் உள்ள அடியாட்களை வைத்து சௌந்தரராஜனை மிரட்டி பணம் மற்றும் வீட்டில் இருக்கும் முக்கிய ஆவணங்களை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

News March 18, 2024

கிருஷ்ணகிரியில் களமிறங்கும் காங்கிரஸ்!

image

2024-மக்களவை தேர்தலில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கிருஷ்ணகிரி தொகுதியிலும் காங்கிரஸ் களம் இறங்குவதாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் காங். சார்பில் செல்லகுமார் வெற்றி பெற்று எம்பியானது குறிப்பிடத்தக்கத்து. அதிமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் உட்பட 15 வேட்பாளர்கள் களமிறங்கினர்.

News March 18, 2024

திமுக பிரமுகர் கொலையில் இளைஞர் சரண்

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் கார்த்திக்கை (38) கடந்த 15ம் தேதி 3 பேர் கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த கொலை விரோதம் காரணமாக நடந்துள்ளது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பாகலூர் போலீசில் பிரதாப் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

News March 18, 2024

கிருஷ்ணகிரி அருகே வார் ரூம் திறப்பு விழா

image

2024 கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட வழக்கறிஞர் அணி சார்பில்(WAR ROOM) கட்டளை மையம் திறப்புவிழா நேற்று(மார்ச் 17) நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன்., மாநில சட்டத்துறை இணை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட வழக்கறிஞரணி அணி கலந்து கொண்டனர்.

News March 17, 2024

கண்டா வர சொல்லுங்க போஸ்டரால் பரபரப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த பாவக்கல் பகுதியில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமாரை கண்டா வரச் சொல்லுங்க என போஸ்டர் ஒட்டியதால் இப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இது போன்ற போஸ்டர்களை கிராமப் பகுதியில் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News March 17, 2024

குறைதீர் கூட்டங்கள் ரத்து – ஆட்சியர்

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19 இல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம்,மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம், மாதாந்திர மக்கள் தொடர்பு திட்ட முகாம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என்றார்

News March 16, 2024

கிருஷ்ணகிரி: வழிப்பறி, திருட்டு வழக்கில் மூவர் கைது

image

சாமல்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இதனைத் தடுக்கும் வகையில் ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 15) வேலம்பட்டி வைரக், பட்டக்கப்பட்டி ஜனா, கொள்ளஹள்ளி திவாகர் ஆகிய மூவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!