India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று(மே 6) வெளியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்டத்தில் தேர்ச்சி 91.87% பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 89.34 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் – 94.04% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
தேன்கனிக்கோட்டை அருகே சந்தனபொடி என்ற இடத்தின் அருகே உள்ள விவசாய நிலத்தில் நேற்று(மே 5), மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. பன்றிக்காக வைத்திருந்த மின் வேலியை கடக்க முயன்றபோது, மின்சாரம் பாய்ந்து யானை சம்பவ இடத்திலேயே பலியானது. இது குறித்து தேன்கனிகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருண்கிரி மாவட்டம் சூளகிரி அடுத்த ஓசஹள்ளி, அஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த தம்பதி கனப்பள்ளி-கவிதா. இவர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடி, மின்னல் தாக்கி
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவல் அறிந்த வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி நேற்று(மே 5) நேரில் சென்று சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
கிருஷ்ணகிரி அருகே பெரிய ஏரிக்கரையில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஓம் ஸ்ரீகால பைரவர் திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி அத்திமரம் பாலாலய யாகம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் கோவில் பூசாரி சேகர் ஆகியோர் தரிசனம் மேற்கொண்டனர்.
கிருஷ்ணகிரி, குரியனப்பள்ளியை சேர்ந்தவர் ரமேஷன் . இவர் போலந்து நாட்டில் உள்ள பல்கலைகழகத்தில் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே நாட்டை சேர்ந்த எவலினா மேத்ரோ (31) என்ற பெண்ணுடன் ரமேஷனுக்கு காதல் மலர்ந்தது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் தமிழ் கலாச்சாரத்தின் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
போச்சம்பள்ளி நகர் அரிமா சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று (மே 5) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது. முகாமில் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்படும் இந்த அரிய வாய்ப்பினை சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 40 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வந்த குறவர் இன மக்களின் வீட்டை ஜேசிபி மற்றும் அடியார்களுடன் சென்று இடித்து சேதப்படுத்தி வீட்டின் உரிமையாளர் காந்தா என்பவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தாக்கிய நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.04) இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், தற்போது மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியில் பொதுமக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஆண்டுதோறும் நடத்தப்படும் மாங்கனி கண்காட்சி இந்தாண்டு நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சரயு தலைமையில் நடைபெற்றது. இதில், மா விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு ஆலோசனைகளை மாவட்ட ஆட்சியர் சரயு வழங்கினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பாக தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் சீ.பாபு, வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.பி.காளியப்பன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.